இவ ரெ ல்லா ம் ஹீ ரோ வா நடிச் சா யா ரு பார்ப் பாங் க ..?? லெ ஜன்ட் சர வண ன் கு றித்து வெ ளிப்ப டை யாக பேசி ய ஹா ரிஸ் ஜெ யரா ஜ் ..!! வெ ளியா ன லே ட்ட ஸ்ட் தக வல் இ தோ ..!!

0 183

பிரபல சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தான் சரவணன் அருள் . ஆரம்பத்தில் தன்னுடைய கடையின் விளம்பரத்தில் நடித்து வந்தார்.  அதுவும் அப்போதே பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து விளம்பரத்தில் நடித்து வந்தார். அப்போது இதை பலரும் விமர்சனம் செய்து வந்தனர் . இதையடுத்து தற்போது தி லெஜன்ட்  என்ற படத்தில் ஹீரோவாக முதன்முறையாக நடித்துள்ளார் . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரத்தேலா  நடித்திருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து பிரபு, விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு போன்ற பல முன்னணி பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார் . பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் வாடிவாசல் என்ற பாடல் வெளியாகியிருந்தது . இப்படி வெளியான இந்த பாட்டை ரசித்தவர்களை விட விமர்சனம் செய்தவர்கள் தான் அதிகம் .

அப்படி இருந்தும் கூட  சரவணன் அருள்  தன்னுடைய படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னை நேரு அரங்கில் பிரமாண்டமாக நடத்தினார் . இந்த நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டே ,தமன்னா ,ராய் லட்சுமி போன்ற 10க்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகள் கலந்து கொண்டனர்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜ் பேசியிருந்தார் . அவர் கூறியதாவது ,முதலில் இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் நான் பண்ண மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டேன் . பின்னர் ஆறு மாதம் கழித்து இப்படத்தின் இயக்குனர் கதையை மாற்றி விட்டு வந்ததும் நான் ஒப்புக்கொண்டேன் .

லெஜண்ட் சரவணன் என்னுடைய நண்பர் தான் . இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்று சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது . இவரெல்லாம்  நடிச்சா யாரு பாப்பாங்கன்னு நினைச்சேன், ஆனா இந்த படத்தில் அவரும் படக்குழுவினரும் கடுமையாக உழைத்துள்ளார்கள் என்று கூறியிருந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.