இறப் பதற் கு முன் ன ரே தன்னு டை ய கடை சி ஆசை யை கூறி ய சந் திரபா பு ..!! அ வர் இ றந்த பிற கு நிறை வே ற் றிய எம் எஸ் விஸ் வநா தன் ..!! பல வருட ங்க ள் கழி த்து வெளி யா ன உ ண் மை தக வல் ..!!

0 361

சந்திரபாபு தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் , சிறந்த பாடகராகவும் இருந்து வந்தவர் . மேலும் இவர் தனஅமராவதி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் .இப்படி அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி நகைச்சுவை நடிகர் சந்திரபாபு . அதுவும் ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் ,சிவாஜி ,ஜெமினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார் .

இதையடுத்து ஆரம்பத்தில் திரைத்துறையில் ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று சந்திரபாபு அலைந்து கொண்டிருந்தபோது எம்எஸ் சுப்பையா நாயுடுவை அணுகியிருக்கிறார் . அப்போது அவருக்கு உதவியாளராக இருந்து வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள். இதனால் எம் எஸ் விஸ்வநாதனிடம்  சந்திரபாபுவை,

பாட சொல்லி விட்டு சுப்பையா நாயுடு சென்று விடுவாராம் .அப்போது சந்திரபாபுவுக்கு தமிழ் உச்சரிப்புகள் சரியாக வராததால் விஸ்வநாதன் இவரை நிராகரித்துள்ளார். ஆனால் இதன் பிறகு பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் சந்திரபாபு.

அப்போது கூட நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர் சந்திரபாபுவும் , எம்எஸ் விஸ்வநாதன் அவர்களும்.மேலும் சந்திரபாபுவுக்கு இருந்த ஒரு சில கெட்ட பழக்கத்தினால் சினிமா துறையில் இருந்த பல நடிகர்கள் அவரிடம் இருந்து விலகினார்கள் . ஆனால் எம் எஸ் விஸ்வநாதன் கடைசிவரை ,

அவருடன் நட்பாகவே இருந்து வந்தார் . இதைத்தொடர்ந்து சந்திரபாபுவின் உடல்நிலை சரி இல்லாத போது தன்னுடைய கடைசி ஆசையை கூறியிருந்தார்.அந்த வகையில் நான் இறந்த செய்தியை முதலில் எம் எஸ் விஸ்வநாதன் தான் அறிவிக்க வேண்டும் என்றும், என்னுடைய உடல் எனது நண்பனான எம் எஸ் விஸ்வநாதன்,

வீட்டில் சிறிது நேரம் வைத்து விட்டு தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம் .பின்னர் அவர் கூறியது போலவே 1974 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு எம் எஸ் விஸ்வநாதன் வீட்டில் அவரின் உடல் சிறிது நேரம் வேக வைக்கப்பட்டு விட்டு தான் கல்லறையில் அவரது உடலை அடக்கம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.