அப் போ தே கார் த்தி படத் தில் நடித்தி ருக் கும் கீ ர்த்தி ஷெ ட்டி ..!! இவ் வள வு நா ளா இ து தெரி யா ம போ ச் சே ..?? எந் த பட த்தி ல் தெ ரி யுமா ..?? இ ணையத் தில் வை ர லா கும் பு கை ப்ப டம் ..!!

0 345

கீர்த்தி ஷெட்டி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார் . 18 வயதான இவர் கடந்த ஆண்டு வெளியான உப்பேனா  என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் . இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி வெளியான இந்த திரைப்படம் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு  மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது . குறிப்பாக இந்த படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு என்று  ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டானது என்று கூட கூறலாம் .

பின்னர் இதனை தொடர்ந்து நானி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்க ராய்  படத்தில் நடித்திருந்தார்.  இதனை  தொடர்ந்து தற்போது பல தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திலும்,

நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க இருக்கிறார் .இப்படியொரு  நிலையில் நடிகர் சூர்யாவின் தம்பியான கார்த்தி படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நான் மகான் அல்ல.

இப்படி வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் ஒரு காட்சியில் கார்த்தி ஷாப்பிங் ஒன்றிற்கு செல்வார் . அப்போது அங்கு அம்மாவுடன் ஒரு குழந்தை நடந்து செல்லும் .அந்த குழந்தைக்கு கார்த்தி டாட்டா காட்ட , அந்த குழந்தையும் அவருக்கு டாட்டா காட்டும் . அந்தக் குழந்தை தான்,

கீர்த்தி செட்டி என்று வைரலாகி வருகின்றனர் நெட்டிசன்கள் . மேலும் அந்த குழந்தையும் பார்ப்பதற்கு கீர்த்தி ஷெட்டி போன்று உள்ளதால் பலரும் ஆச்சிரியத்தில் இருந்து வருகின்றனர் . ஆனால் உண்மையில் அந்த குழந்தை கீர்த்தி ஷெட்டி தானா என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.