என் னது , இ ந்த பாலி வுட் ந டிகை சிவ கார்த் திகே யனு க்கு ஜோடி யா க நடிக்க வுள் ளா ரா ..?? எதிர்ப் பார் ப்பை எ கிற வை க் கும் கூட் ட ணி ..!! இ வரா எ ன்று ஆச்சி ரிய மடை ந்த ரசி க ர் கள் ..!!

0 147

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்மொழியை யும் தாண்டி பல மொழிகளிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் . மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது . குறிப்பாக இந்த திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.  இதனால் பல தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனை தங்களின் படங்களில் கமிட் செய்வதற்கு போட்டி போட்டு வருகின்றனர்.

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இதை முடித்த கையோடு கமல்ஹாசனின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன் . இதை தொடர்ந்து பெரும்பாலும் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில்,

தன்னுடன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் . அப்படி தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா மோகனை  டாக்டர் படத்தில் நடிக்க வைத்திருந்தனர் . இவரை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கிறார் .

இப்படியொரு நிலையில்  யோகி பாபு நடித்த மண்டேலா என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் . இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது .

அவர்தான் நடிகை கியாரா அத்வானி . இவர் தற்போது பல ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படி  சிவகார்த்திகேயன் படத்தில் அவர் நடித்தால் இது தான் அவரின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் விரைவில் இந்த படம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.