ரஜி னி அ ந்த அ ளவி ற்கு அழ கா ன நடிக ரே கி டையா து ..!! அவ ரின் ப டம் ஓடு வத ற்கு கார ண மே இது தா ன் ..!! வெளிப் படை யா க கூறி ய லிவி ங்ஸ் டன் ..!! என் ன வெ ன்று நீங் களே பா ரு ங்க ..!!

0 286

தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் கவர்ந்தவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த  திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.  இதனால் அடுத்து ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இதையடுத்து இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது .மேலும்  ஆரம்ப காலகட்டங்களில் ரஜினியின் பெரும்பாலான படங்களில் நடித்த இருந்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் .ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சுந்தர புருஷன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் . குறிப்பாக இவர் நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியராக கன்னிராசி ,காக்கிச்சட்டை ,அறுவடைநாள் போன்ற பல படங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் கூட ரஜினியுடன் நடித்து இருந்தார் நடிகர் லிவிங்ஸ்டன்.

இந்நிலையில் ரஜினி குறித்து பேசிய லிவிங்ஸ்டன் கூறியதாவது,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் . இப்படி  பிரபலமான ரஜினிகாந்த் அந்த அளவிற்கு அழகான நடிகரே கிடையாது . ரஜினியை விட அழகான நடிகர்கள் தமிழ் சினிமாவில் நிறையவே இருக்கின்றனர்.

ஆனால் ரஜினிகாந்த் இந்த உயரத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் அவருடைய திறமை மட்டும் தான். மேலும் சினிமா உலகைப் பொறுத்தவரை ஒரு ஹீரோ வெற்றி பெறுவதற்கு அழகு வயது போன்றவை எல்லாம் தேவையில்லை , கான்ஃபிடன்ஸ் இருந்தால் போதும் எந்த வயதிலும் வெற்றி பெறலாம் என்று கூறியிருந்தார் நடிகர் லிவிங்ஸ்டன்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.