ஒரு வனக்காவலர் நண்பர் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்ட செய்தி..! உண்மையும் கூட..!

0 331

“வீக் எண்ட் ஆனா போதும் save nature, மலையை காப்போம், climb for health’ன்னு விதவிதமா டீசர்ட் அடிச்சு போட்டுகிட்டு வந்துடுறாங்க. நம்ம பெர்மிசன் கொடுக்கலைனா “அங்கிள், ஆன்ட்டி”ன்னு யாருக்காவது பெரிய ஆபிசருக்கு போன் போட்டு கொடுத்து பெர்மிசன் கொடுக்க வச்சுடுறானுங்க.

மலையை பத்தியும் தெரியாது, முதலுதவியும் தெரியாது. திடீர்னு ஆபத்துனா என்ன பண்ணனும்னு தெரியாது. கூட ரெண்டு இன்ஸ்டன்ட் இயற்கையை காப்போம் கோஷ்டி வேற. நாங்களும் ஓரளவு தான் சொல்லிப் பார்க்க முடியும். அதுக்கு மேல போய் தொலைன்னு விட்ற வேண்டியது தான்.”

எனது தாழ்மையான வேண்டுகோள்
நீங்கள் முதல் தலைமுறை பட்டதாரியா? உங்களை நம்பிதான் குடும்பம் உள்ளதா? ஓரளவு வருமானம் வருகிறதா?
ப்ளூ கலர் சாயம் போட்ட ஜீன்ஸூம், பச்சை டையில் சேவ் நேச்சர் ப்ரிண்ட் அடிச்ச டிசர்ட்டும் போட்டு, இரண்டாயிரம் சிசி டீசல் காரில் ஐநூறு கிலோமீட்டர் புகை கக்கிச் சென்று இயற்கையோடு இணையவோ இயற்கையை காப்பாற்றவோ வேண்டாம். இது போன்ற ஆப்பாயில் இயற்கை கோஷ்டிகளைக் கண்டால் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விடவும். அது தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது. அதற்கு மேலும் உங்களிடம் பணம் இருந்து உதவும் குணமும் இருந்தால் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்து விட்டு, மெரினா பீச்சில் குப்பை போடாமல் அரை மணிநேரம் அமர்ந்து செல்லவும்.
ஏனெனில் உங்கள் உடலும் உயிரும் விலைமதிப்பில்லாதது.

தேனியின் சிறப்பே
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதே…

ஆனால் சில நாட்களாக திட்டமிட்டே
மலைகளில் நெருப்பு வைத்தே
மரங்களை மண்ணாக்கும் பணியும்
வெகு சிறப்பாக செய்கிறது
அதிகாரங்களின் கைக்கூலிகள்…

எந்த திட்டமிட்ட செயலுக்கென்று
அறிந்த நாங்கள்
வேதனையையும் கோபத்தையும்
மட்டுமே வெளிப்பாடாய் காட்டும் சூழல்…

நீர்வைத்த நெருப்பில்
எரிவது எங்கள் நெஞ்சம் மட்டுமல்ல
நாளைய சந்ததியும் தான்…

ஆனால் புரிந்து கொள்ளுங்கள்
அற்ப பணத்துக்கும் பதவிக்கும்
ஆசைப்படும் பாவிகளே
நீங்களும் உண்பது பணமல்ல
பதவி நிரந்தரமல்ல…

நாளைய தலைமுறைக்கும்
நமக்கும் எல்லோர்க்கும்
தேவை இந்த விவசாயம்
மண்ணும் மரமும்
அதன் செழிப்பும் நீரும்
என்பது இந்த மதிகெட்டோர்
அறிவரா????

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.