தர்பூசணி பற்றி சமுக வலைதள புரளிகளும் அதன் உண்மையும்..!

2 443

தற்பூசணியில் ஊசி செலுத்தப்படுகிறது என்பது முற்றிலும் பொய் அதாவது வெளிநாட்டில் சோதனைக்காக ஊசி செலுத்தினார்கள் அந்த வீடியோவின் உண்மை தன்னை அறியாமல் பலரும் அது தமிழ்நாட்டில் என்று வதந்தி பரப்பீனார்கள்..!
மற்றொரு பக்கம் தர்பூசணியை பழுக்க வைக்க நச்சு வேதிப்பொருள் கலக்கப்படுவதாகவும் புரளி கிளம்பியுள்ளது.!

உண்மை என்னவென்றால் தர்பூசனி இயல்பாகவே வெயிலில் பழுக்க கூடியவை..!

வதந்திகளை நம்பி ஆரோக்கியத்தை இழக்காதீர்..! செயற்கை உரம் போட்டே வளர்ந்ததாக இருந்தாலும் குளிர்பானத்திற்கு இவை 80% நச்சு குறைவு தான்

கோடைகாலம் வந்துவிட்டால் தெருவுக்கொரு தர்பூசணிக்கடை முளைத்துவிடும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்துக்குள் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருப்பார்கள். கண்ணைக் கவரும் இதன் ரத்தச் சிவப்பு நிறம், நம்மையறியாமலேயே நம்மைக் கடையை நோக்கி இழுத்துவிடும். கொஞ்சம் மிளகாய்த்தூளை லேசாக மேலே தூவித் தருவார் கடைக்காரர். மிளகாய்த்தூள்  தூவினால் ஒரு சுவை; அப்படியே சாப்பிட்டால் இன்னொரு சுவை. இரண்டுமே அலாதியானவை. தர்பூசணி சாப்பிடுவதற்காகவே கோடைகாலம் வராதா என ஏங்குபவர்களும் உண்டு. குறைவான விலையில் நிறைவான பலன் தருவது தர்பூசணி. இது தரும் எண்ணற்ற பலன்களில் சிலவற்றைப் பார்ப்போம்…

தர்பூசணி

இதய நலனைக் காக்கும்!
இதில் லைக்கோபீன் (Lycopene) என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. ஃப்ரீ ராடிகல்ஸால் உண்டாகும் தீமைகளைக் குறைக்கும்; இதயத்தை இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவும். தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும்.

You might also like
2 Comments
  1. சிவா says

    வணக்கம்எ தோழரே… என் தங்கை 5 மாதம் கருவுற்றிருக்கிறாள்.. மருத்துவமனையில் SUGAR உள்ளதாகவும், இனிப்பான பழங்கள் சாப்பிட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்கள்.. தர்பூசணி சாப்பிடலாமா…

    1. Save Farming says

      மருத்துவம் பற்றி அவ்வளவு தெளிவு இல்லை நம்பிக்கையான மருத்துவரிடம் கேளுங்கள்

Leave A Reply

Your email address will not be published.