குழந்தை இருப்பதாக சிகிட்சையளித்த மருத்துவர்கள்.. ஆனால் ஸ்கேன் ரிப்போர்டில் காத்திருந்த அதிர்ச்சி உண்மை..!

0 751

வயிற்றில்கட்டி…ஆனால் குழந்தை இருப்பதாக சிகிட்சையளித்த மருத்துவர்கள்.. 7 மாதங்கள் சிகிட்சையளித்த கொடூரம்.வயிற்றில் கட்டியோடு சிகிட்சைக்கு போன பெண் ஒருவருக்கு கடந்த 7 மாதங்களாக கர்ப்பமாக இருப்பதாக நினைத்து தவறான சிகிட்சையளித்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன். கூலிவேலை செய்து வாழ்வை ஓட்டிவரும் இவரது மனைவி அஸ்வினிக்கு 22 வயது ஆகிறது. கடந்த மார்ச்சில் அவர் வீட்டு அருகிலேயே உள்ள அரசு ஆரம்ப நிலையத்துக்கு சிகிட்சைக்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்ல தம்பதிகள் உற்சாகத்தில் மிதந்தனர்அவருக்கு கடந்த ஏழு மாதங்களாகவே கர்ப்பிணிகளுக்கு போடப்படும் தடுப்பூசி, மாதாந்திர பரிசோதனை, மாத்திரை வினியோகம் ஆகியவை நடந்தது.

கடந்த 19ம் தேதி மருத்துவமனைக்கு சென்றவர் தனக்கு கடும் வயிற்றுவலி இருப்பதாக சொல்ல மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தனர். உடனே தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்தவருக்கு வயிற்றில் இருப்பது குழந்தையே அல்ல…நீர்கட்டி எனத் தெரியவந்தது. உடனே இன்னொரு ஸ்கேன் செண்டருக்கு போய் பார்த்தனர். அங்கும் அது நீர்கட்டிதான் என உறுதி செய்தனர்.

உடனே அஸ்வினியும், அவர் உறவுகளும் ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிட்சையளித்த மருத்துவர்களிடம் வந்து கேட்க, சாரி…தெரியாம நடந்துடுச்சு என கூலாக சொல்லியிருக்கிறார்கள். கர்ப்பத்துக்கும், கட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் சிகிட்சையளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் அஸ்வினி குடும்பத்தினர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.