தொப்புள்கொடி என்னும் உயிர்கொடி எய்ட்ஸ் நோயாளியே குணமடைந்தார்: சாதித்த இந்திய மருத்துவர்

0 192

பெறப்பட்ட நோய் எதிர்ப்பு குறைநோய் என அழைக்கப்படும் ஹெச்.ஐ.வி நோய்க்கு இதுவரை மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஸ்டெம்செல் மாற்று சிகிட்சை மூலம் அதை சாதித்துள்ளார் இந்திய வம்சாவழி மருத்துவர் ஒருவர்.அண்மைக்காலமாக உலக அளவில் ஸ்டெம்செல் மருத்துவம் பிரசித்தி பெற்று வருகிறது. குழந்தை பிறந்ததுமே தாயின் தொப்புள்கொடியை வாங்கி சேமித்து வைக்கும் பழக்கம் மருத்துவமனைகளிலேயே வந்துவிட்டது.பொதுவாகவே எய்ட்ஸ் நோய்க்கு மருந்தே கிடையாது. உலக அளவில் இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹச்.ஐ.வி நோய் தாக்கிய ஒருவருக்கு ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிட்சை நிவாரணம் தந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2003ம் ஆண்டு எய்ட்ஸ் நோய் தாக்கியது. அதே நோயாளியை மீண்டும் 2012ம் ஆண்டு புற்றுநோயும் தாக்கியது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஹீமோதெரபி சிகிட்சை அளிக்கப்பட்டது. அவரை நோயிலிருந்து மீட்பது குறித்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியரும், இந்திய வம்சாவளி மருத்துவருமான ரவீந்திரகுப்தா தலைமையில் அவரது சக பேராசிரியர்கள், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் சேர்ந்து கூட்டாக முடிவு செய்தனர். கடைசியில் இதில் ஸ்டெம்செல் மாற்று சிகிட்சை செய்வது என முடிவு எடுத்தனர்

இந்த இடத்தில் ஸ்டெம்செல் குறித்து சொல்வது அவசியம். உலகில் குழந்தையின் ஜனனத்தின் போது அதன் தொப்புள்கொடி அறுக்கப்படும். அப்போது அதில் இருந்து வரும் ரத்தம், தனிச்சிறப்பு வாய்ந்த செல்களால் ஆனது. இவை தான் செல்களுக்கெல்லாம் மூல செல்கள். இந்த செல்களைக் கொண்டு செய்வது தான் இந்த ஸ்டெம்செல் சிகிட்சை.

எய்ட்ஸ் நோயாளியின் சிகிட்சைக்காக எச்.ஐ.வி பாதிக்காத ஒருவரது ஸ்டெம்செல் தானமாக பெறப்பட்டது. இதில் தான் அவரது எய்ட்ஸ் நோய் குணமாகியுள்ளது. இதுகுறித்து பேராசிரியர் நரேஷ் குப்தா கூறுகையில், ‘’பத்து வருசங்களுக்கு முன்னர் ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த தீமொத்தி பிரவுன் என்பவருக்கு முதன் முறையாக ஸ்டெல்செல் மாற்று சிகிட்சையின் மூலம் எய்ட்ஸ் நோயிலிருந்து மீள் சிகிட்சை அளிக்கப்பட்டது. அந்த வகையில் இது இரண்டாவது ஆப்ரேசன். இது வெற்றிகரமாக முடிந்து உள்ளது.

கடந்த 18 மாதங்களாக இதனால் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை எடுத்து கொள்ளாமல் நலமுடன் வாழ்கிறார்.”என்றார்.மருந்தே இல்லாத ஒரு நோய்க்கு மாற்று சிகிட்சை மூலம் தீர்வு கண்டுள்ளார் இந்த இந்திய வம்சாவளி மருத்துவர்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.