பாலை ஏற்றுமதி செய்து பால் பவுடரை இறக்குமதி செய்ய அனுமதியா..?

0 250

பால் பவுடர் இறக்குமதிக்கு இந்திய அரசு அனுமதி என்கிற செய்தி.
இதை விட ஆபத்தானது அமெரிக்காவுடன் மோடி அரசு நடாத்திவரும் குறுகியகால வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தை.

இதில் பால் மற்றும் பாலில் இருந்து பெறப்படும் மற்றப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையைத் திறக்க கோரிக்கை வைத்துள்ளது. இதில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் அது இந்தியாவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தும்.

இதைப் பெரிதாக இந்திய ஊடகங்கள் பேசவில்லை! கால் நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி ஆகியவற்றில் உலக அளவில் இந்தியா முன்னணி நாடு, மேலும் நமது விவசாயிகளின் வாழ்வாதாரம் நிலம் என்றால் உயிராதாரம் கால் நடை வளர்ப்பாகும்.
இந்த நிலையில்தான் நமது நாட்டடு மாட்டினங்களை காப்பாற்றிய வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது.

ஏனெனில் நாட்டின மாடுகளின் பால்தான் நமது எதிர்கால சந்ததிகளை நோயின்றி வாழ வைக்கும் வல்லமை கொண்டதாகும். நாட்டு மாட்டின அழிவு நமது இனம் அழிவதன் முன்னோடியே என்பதை உணர வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.