இந்தவகை மீன்களை தடை செய்யப்பட்ட  உணவாக அரசு அறிவித்தது ஏன் தெரியுமா..?

0 1,493

மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியானது..! ஆதனால் விற்பனை விலை மளிவாக விற்பனை செய்தனர் இன்னும் ஒரு சில இடங்களிலும் விற்பனையில் உள்ளது

வெளிநாட்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இவை தொடர்ந்து இடைவிடாமல் மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை.


மேலும் இவை 8 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவை. இதனால் இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால் அவைகளை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும் இம்மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனம்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட மீன்களாகும்.
இந்த வகை மீன்கள் நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும் அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயநிலை உருவாகும்.


இந்த மீன்களை பண்ணை குட்டைகளிலோ அல்லது மீன்வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால் இவை மழை மற்றும் வெள்ள பெருக்கு காலங்களில் குளங்களில் இருந்து தப்பித்துவிட வாய்ப்பு உள்ளது. தப்பி செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பு இல்லாத நிலை உருவாகும்.


குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நமது உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் வழி இல்லாமல் போய்விடும். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் விவசாயிகள் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம். ஏற்கனவே மீன் பண்ணைகளில் இந்த வகை மீன்களை வளர்த்து வரும் மீன்வளர்ப்போர் மீன்பண்ணையில் வளர்ந்து வரும் மீன்களை அழிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடப்படுகிறது. மேலும் பொது மக்களும் இந்த வகை மீன்களை கொள்முதல் செய்திட வேண்டாம். அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.


மேலும் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் குறித்து பொது மக்கள் 04162240329 என்ற தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.