தென்னை மரம் இருக்கும் ஆனால் ஒரு தேங்காய் கூட இருப்பதில்லை..!

0 622

எலிகள் தென்னை மரத்தில் ஏறுவதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
பெரிய தென்னைமட்டையை நடுவாக்காக கிழித்து ஒரு பகுதியை உச்சித்தண்டின் கீழ் சுற்றியும் மறுபகுதியை எதிர்திசையில் சுற்றவும்.
நடுத்தண்டில் 2-3 அடிக்கு, சீமைக் கருவேல் அல்லது முற்கம்பிகள் சுற்றி விடவும். இவ்வாறு அணில் மற்றும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.


பூக்கள் மற்றும் குரும்பை உதிர்வதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

பூ உதிர்வைத் தடுக்க உப்பை (2 கிலோ/மரம்) பூ நுனியில் தடவவும். மேலும் வேர் பகுதிகளுக்கு உப்பு போட்டு நீர் பாய்ச்சவும்.
வேப்ப எண்ணெய் தெளித்து பூ உதிர்வை குறைக்கலாம்.
சாம்பல் இடவும்
பூப்பதற்கு முன் பாத்தியில் கொழிஞ்சி மற்றும் எருக்கு இடவும்.


தென்னையில் காண்டாமிருக வண்டு பெருக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
தோப்பில், மண் பானைகளில் தண்ணீரில் ஆமணக்கு புண்ணாக்கு போட்டு வைக்கவும். மூன்று நாட்களுக்கு பிறகு அதன் மணத்தால் வண்டு ஈர்க்கப்பட்டு சாகிறது.
வளரும் குருத்து மற்றும் பக்கத்துப் பகுதிகளில் வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளிக்கவும்.


தென்னையில் சிவப்பு கூண் வண்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
கூண் வண்டு துளைத்த ஒட்டையை சுத்தம் செய்து, உப்பு போட்டு பஞ்சு கொண்டு அடைத்து வைக்கவும்.


தென்னை மரத்தண்டை கரையான் தாக்கத்திலிருந்து எவ்வாறு கட்டுப்படுத்துவது?
தென்னை மரத் தண்டின் 2 அடி உயரத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவும்
500 கிராம் உப்பை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க தண்டின் மேல் ஊற்றவும்
பண்ணைப் பறவைகள் வளர்த்து, கரையானை சாப்பிட விடவும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.