ஸ்ரீரங்கத்திலே யானை மேல் 1918_19இல் ஒரு வழக்கு பதியபட்டது யானைக்கு நாமம் போடுவதா அல்லது பட்டை போடுவதா என்ற பிரச்சினை வைணவர்-களுக்குள் ஏற்பட்டது.

0 2,032

ஸ்ரீரங்கத்திலே ஒரு யானை இருந்தது.

1918_19இல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவர்-களுக்குள் ஏற்பட்டது.

அப்பொழுது அந்த வழக்கு இந்திய கீழ் நீதிமன்றங்களைக் கடந்து, இலண்டன் பிரிவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள்.

யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படியே ஸ்ரீரங்கத்திலிருக்கிற வடகலை நாமக்காரர்கள் கெட்டிமேளத்தோடு வந்து ஒரு மாதம் யானைக்கு வடகலை நாமம் போட்டார்கள்,

பிறகு தென்கலை நாமக்காரர்கள் வடகலை நாமத்தை தேய்த்து அழித்துவிட்டு ஒரு மாதம் யானைக்குத் தென்கலை நாமம் போட்டார்கள்.

மூன்று மாதங்கள் நடந்த இந்தச் சண்டையால் யானையின் நெற்றி புண்ணாகி சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டது.

மறுநாள் தி இந்து ஆங்கில பத்திரிக்கையில் ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடித்து சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது என்று செய்தி வந்தது.

ஆனால், அதற்கு அடுத்த நாள் அதே பத்திரிகை அதை மறுத்து வேறு செய்தி வெளியிட்டது..,

ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடிக்க-வில்லை. அப்படி தவறுதலாகப் பிரசுரிக்கப்-பட்டது. உண்மையில் யானைக்கு மதம் பிடிக்காமல்தான் சங்கிலியை அறுத்துக்-கொண்டு ஓடியது என்று.

பதிவு; தமிழ வேள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.