இவர்களுக்கு தேவை எல்லாம் காலம்காலமாக நஷ்டப்பட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து தரும் ஒரு அப்பாவி கூட்டம்.

0 452

திரைவிமர்சனம்

ஆகச் சிறந்த உண்மையான விமர்சனமும் கூட இது

இதில் கார்த்தி விவசாயி என்ற போர்வையில் விவசாயிகளை உசுப்பேற்றி தவறான பாதைக்கு இட்டு செல்கிறார்.

நான் சொல்வது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பது ரொம்பவும் அவசியம்.

விவசாயிகளை உயர் வாகத்தானே பேசி இருக்கிறார் இதில் என்ன பிரச்சினை என கேட்கலாம் ஆனால் விவசாய குடியில் பிறந்த புதிய தலைமுறை இளைஞர்கள் விவசாயம் பார்த்து உருப்படமால் போக செய்ய திட்டமிட்டு நடத்தப்படும் உளவியல் தாக்குதல் இது.

ஏற்கனவே விவசாயம் செய்து உருப்படாமல் போய் விட்டோம் என்பதால் நம் பிள்ளைகளாவது படித்து நாலு காசு சம்பாதித்து வறுமை அற்ற வாழ்வை வாழட்டும் என நகை அடமானம் வைத்து நிலத்தின் மீது கடன் வாங்கி படிக்க வைத்தால் நடிகர்கள் இயற்கை ஆர்வலர்கள் விவசாய ஆர்வலர்கள் என்ற போர்வையில் விவசாய குடும்பத்து இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறனர்.

போதாகுறைக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து சென்னை பெங்களூர் கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் ஐடி இளைஞர்கள் கூட Save Vivasayam Save farmer என தங்களின் பங்குக்கு நன்றாகவே உசுப்பேற்றுகிறனர்.

இவர்களுக்கு எல்லாம் உண்மையில் விவசாயிகளின் மீது அக்கறை உண்டா என பார்த்தால் இல்லவே இல்லை. இவர்களுக்கு தேவை எல்லாம் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய ஒரு முட்டாள் விவசாய சமுதாயம் தேவை. தவிரவும் விவசாய குடும்பத்து இளைஞர்கள் விவசாயம் பார்க்காமல் விட்டுவிட்டு படித்து வேலைக்கு வந்துவிட்டால் நமக்கு ஆபத்து நம் வேலைக்கும் ஆபத்து என்ற பொதுநலம்தான்.

இவர்களுக்கு தேவை எல்லாம் காலம்காலமாக நஷ்டப்பட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து தரும் ஒரு அப்பாவி கூட்டம்.

ஒரு லிட்டர் பால் விலை ஒரு லிட்டர் மினரல் வாட்டர் விலையை விட குறைவானது என்ற படு பயங்கரமான உண்மை இந்த அறிவு சார்ந்த சமுதாயத்தை உறுத்தவில்லை ???

ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட இருநூறு லிட்டர் தண்ணீர் வேண்டும். சென்னையில் இருநூறு லிட்டர் நீரின் விலை எவ்வளவு ???

சரி அரசாங்கம் லிட்டர் க்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால் போதும் இதே கூட்டம் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுகிறது.

சரி எவனாவது உழவர் சந்தையில் தோட்டத்தில் விளைந்த பொருட்களை விற்கப் போனால் அவனிடம் ஒரு ரூபாய் க்கு கூட பேரம் பேசும் கூட்டம் குளிரூட்டப்பட்ட மால்களில் இதே மக்காச்சோளத்தை நூறுரூபா சொன்னாலும் பெருமையாக வாங்கி சாப்பிடுகிறனர்.

சரி எட்டுவழி சாலை பத்து வழிச்சாலை போட்டால் தென்னைமரத்துக்கு ஐம்பதாயிரம்,புளி மரம் நாற்பதாயிரம், கிணற்றுக்கு 25 லட்சம் , ஏக்கருக்கு 25 லட்சம் பணம் கிடைக்கும் அதிலாவது பிழைத்துக்கொள்ளலாம் என்றால் அதற்கும் வேட்டு வைத்துவிட்டனர் அரசியல் வாதிகளும் முகநூல் போராளிகளும்.

விவசாயிகளை நம்பி ஒரு பயலும் லோன் தரமாட்டான் காரணம் விவசாயி என்ற போர்வையில் கடன்தள்ளுபடிகளை அனுபவிக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும்தான். கடன் தள்ளுபடி எல்லாம் விவசாயிகள்தான் அனுபவிக்கிறனர் என இந்த உலகமே நம்பிக்கொண்டு இருக்கிறது அதை மாற்றிக்கொள்ளவும்.

இந்த லட்சணத்தில் விவசாயி எங்கே உருப்படுவான் ???

ஒரு ஏக்கரில் நெல் நட்டு சேதாரம் இன்றி நல்ல விளைச்சல் வந்தால் கிடைப்து ரூ 25000 தான், மக்காச்சோளம் பருத்தி சூரிய காந்தி என எதை செய்தாலும் கிடைப்பது என்னவோ இதைவிட குறைவுதான். போதா குறைக்கு ஆட்கள் பற்றாக்குறை வேறு (நூறூநாள் வேலைத்திட்டம் வந்தது விவசாயம் தொலைந்தது).

விவசாயம் செய்தால் உருப்பட மாட்டோம் என தெரிந்து தானே சிவக்குமார் புத்திசாலித்தனமாக சினிமாக்குள் நுழைந்து கோடீஸ்வரனாக ஆகிவிட்டார். அதை தப்பு சொல்லவில்லை ஆனால் உசுப்பேற்றி விடும் கேவலமான வேலையை செய்ய கூடாது என்றுதான் சொல்கிறோம்.

இவ்வளவு பேசும் கார்த்தி விவசாயம் தான் உசத்தி விவசாயி கடவுள் என பில்டுஅப் தரும் கார்த்தி சினிமாவை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வரட்டும் பார்க்கலாம்.

ஒரு பயலும் வரமாட்டான் எல்லாம் தெளிவாக இருக்கிறானுக (உசுப்பேத்துவதோடு சரி).

ஆக கடைசியாக நாம் கூறுவதெல்லாம் விவசாயிகளை உண்மையில் மதிப்பதாக இருந்தால் விளைபொருள் களை வாங்கும் போது அநியாயத்திற்கு பேரம் பேசாதீர்கள்.

பால்விலை உயர் த்தப்பட்டால் கத்தி கூப்பாடு போடாதீர்கள்.

நன்றாக சம்பாதித்த நபர்கள் சென்னையில் கோடிக்கணக்கில் சில சதுர அடிகள் வாங்குவதைவிட கிராமத்தில் சில ஏக்கராவது வாங்குங்கள் அதுவும் நல்ல விலை கொடுத்து கடனில் உள்ள அந்த விவசாயி பிழைக்கட்டும்.

Quora shared…

You might also like

Leave A Reply

Your email address will not be published.