பூரான்கள் கடி பட்ட இடம் சிறிது நேரத்திற்கு வலியைக் கொடுக்கும் அவ்வளவே..!

0 744

பூரான்கள் (CENTIPEDS)

வெப்பமண்டலப் பகுதிகளில் அதிக எண்ணிக்கைகளில் காணப்படும் பூரான்கள் முழு இறைச்சியுண்ணிகள்.

உலகில் சுமார் 3000 வகைகள் உள்ளன. அதிக பட்சமாக ஒரு அடி நீளம் வரை வளரும் பூரான்களுக்கு 15 ஜோடி முதல் 177 ஜோடி வரை கால்கள் இருக்கும். இரவாடிகளான இவற்றின் உணவு…சிறு பாம்புகள், பல்லிகள் , சிலந்திகள், புழுக்கள் , சிறு தவளை, மற்றும் சிறிய பறவைகள் மற்றும் குஞ்சுகள் , எலிகள், அரணை போன்றவற்றை உண்கின்றன.

சாதாரணமாக வீட்டிற்கு வரும் பூரான்களால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது.பூரானின் உடலில் பின்புறம் கடைசியில் உள்ள இடுக்கி போன்ற ஒரு ஜோடி நச்சுக் கொடுக்கே அதற்கான இரையைப் பிடிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இது கொடுக்கல்ல…. பரிணாமத்தில் உருமாற்றமான கால்களே அவ்வாறு உள்ளன.

பூரான்கள் முட்டையிட்டவுடன் ஆண் பூரான்கள் அதை சாப்பிடாமல் இருக்க மண்ணிற்குள் புதைத்து வைக்கின்றன. முட்டை பொரித்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் உணவு தேட துவங்கிவிடும்.

பூரான்களின் நஞ்சு மனிதனை ஒன்றும் செய்யாது கடி பட்ட இடம் சிறிது நேரத்திற்கு வலியைக் கொடுக்கும் அவ்வளவே. உடனடியாக மஞ்சள் கலந்த நீர் கொடுப்பதும் பாடம் அடிப்பதும் கடி வாங்கியவரின் பதட்டத்தைத் தவிர்க்கவே தான். மற்றபடி இது மனிதனை சாகடிக்காது………

You might also like

Leave A Reply

Your email address will not be published.