ஒரு நபருக்கு 3லட்ச ரூபாய் கட்ட வேண்டும்.கட்டிய பணத்தை திரும்ப கேட்டால் தர முடியாது என்று மிரட்டுவார்கள்

0 441

நாளுக்கு நாள் வேலையின்மை அதிக அளவில் உருவெடுத்தது கொண்டு உள்ளது இதனை சாதமாக பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் பலரிடம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி மோசடி செய்து வருகின்றனர்.

QNET என்ற ஏமாற்று நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பலரது குடும்பம் சீரழிய முக்கிய காரணமாயினர்.
நன்கு சம்பாதிக்கலாம்: நன்கு வாழலாம்: வேலை செய்யாமலே பணம் கொட்டும் ஐந்து வருடத்தில் ஐந்து கோடி என்றெல்லாம் சொல்லி பாவப்பட்ட,கடன் பட்ட ஏழை இளைஞர்களை குறி வைத்து அழைத்துச் செல்கின்றனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறேன் அடிக்கடி கம்பெனி செலவில் வெளிநாட்டிற்கு சென்று வரலாம் என்று பணம் கட்ட சொல்லி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டனர்.QNET-ல் வேலையெல்லாம் கிடையாது.இத்தனை நபர்களைச் சேர்த்துவிட்டால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

அதற்கு ஒரு நபருக்கு 3லட்ச ரூபாய் கட்ட வேண்டும்.கட்டிய பணத்தை திரும்ப கேட்டால் தர முடியாது என்று மிரட்டுவார்கள்.நீங்கள் ஆள்களை சேர்க்காவிட்டால் பணம் அம்போதான்.குமரி மாவட்ட இளைஞர்கள் ஏராளமானபேர் பணம் கட்டி விட்டு பணத்தைத் திரும்ப பெற முடியாமல் போராடி வருகின்றார்கள்.விரைவில் மாவட்ட ஆட்சியரிடமும், மாநில மற்றும் மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவினரிடமும் புகார் அளிக்கப்படும்.மதுரை ஐகோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்கு தொடுக்கப்படும்.

பணத்தை நாங்கள் யாரிடம் கொடுத்தோமோ அவர்கள் பெயரிலேயே வழக்கும் புகாரும் அளிக்கப்படும்.ஏழை மக்களை ஏமாற்றும் ஆள் சேர்த்தால் காசு என்ற தொழில் செய்யும் QNET கம்பெனியை தமிழ்நாட்டிலிருந்தே விரட்டி பல குடும்பங்களின் வாழ்வை காப்பாற்றுவோம்.QNET என்ற இந்திய அரசால் தடை செய்யப்பட்ட போலி நிறுவனம் என்பதை அறிந்து கொள்வோம்.இதில் முக்கியமாக திங்கள்சந்தை பகுதியைச் சேர்ந்த புவனேஷ்,பிரபு,எமில் என்ற விஜு, ஜோஸ் இவர்கள் தான் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடும் கமிஷன்தார்கள்.

இவர்களது புகைப்படங்களும் ஏற்கனவே பாதிக்கப் பட்டோர் சார்பில் சமூக வலைத்தளத்தில் போடப்பட்டுள்ளது.இனி ஒருவரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்கான ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு புகைப்படம் வெளிவரும்.

https://youtu.be/kdwE3bzqbow

You might also like

Leave A Reply

Your email address will not be published.