திருச்சிக்கு எதார்த்தமாக ஒரு பயணம் ஒரே காட்சிகளை பலமுறை காண நேரிட்டது..!

0 1,724

சமீபத்தில் திருச்சியில் ரயில்வே பணிமனையில் வேலைக்கு ஆள் சேர்க்கும் பொழுது தமிழர்களை தவிர்த்து முழுவதும் வட இந்தியர்களான ஹிந்திக்காரர்கள் பணியில் அமர்த்தப்பட்ட செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழர்களை அடிமையாக்கவும் செய்தது.

கல்லூரி கால நண்பரை காண நானும் திருச்சியை நோக்கி பயணித்தேன்..! போகின்ற வழியில் குளிர்பான கடைகள், பாணிபூரி, பாஸ்ட் புட், இளநீர், கரும்பு ஜூஸ், ஐஸ் கடைகள் ஏராளம் கண்டேன்..! இதில் 80% வட இந்தியர்களே..! தமிழர்களையும் தேடினேன் Zomato, swiggy, போன்ற நிறுவனங்களின் வளர்ச்சிக்கா தினக்கூலி வீதம் வாகனத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்..!

பஞ்சம் பிழைக்க வந்த வட இந்தியன் 5ரூபாயாக இருந்தாலும் அடிமையாக இல்லாமல் சொந்தமாக தொழில் தொடங்கி வியாபாரம் செய்து முன்னேற பார்க்கிறான்..! படித்து பட்டம் பெற்ற தமிழனோ பிழைக்க வழியின்றி அடிமை வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான்..!

படிக்காத வடநாட்டவனிடம் இருக்கும் துணிச்சலும் , தன்னம்பிக்கையும் கல்வியறிவு பெற்ற தமிழனிடம் ஏன் இல்லை..? இவ்வளவு கீழ்தரமானது தமிழக கல்வியறிவு..?

ஆம் இதில் மாற்று கருத்தில்லை. எளிமையாக புரியவைக்கவா..? பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பெருமையாக பேசும் கல்வியறிவு என்றாவது பெருமையாக பேசியதுண்டா மாடு மேய்ப்பவனை பற்றி..?

இதுபோல மடத்தனமான கல்விமுறை விரைவில் தமிழர்களை அண்ணியரிடம் கையேந்த வைக்கும் என்பதில் ஐயமில்லை ஆனால் அன்று நமது வளங்களை வைத்து நமக்கே வியாபாரம் செய்வான்..! இன்று குளிர்பானங்கள் போல..!

தமிழகத்தில் விளைகின்றன கரும்பை வைத்து வட இந்தியன் நாளுக்கு 4ஆயிரம் வரை சம்பாரிக்கிறான் என்றால் வயிற்றெரிச்சல் படுவோமே தவிர அவனது உழைப்பையும், துணிச்சலையும் பேச மறந்து விடுகிறோம்..!

திருச்சியில் ரோட்டு அருகில் கரும்பு ஜீஸ் கடை வைத்து நடத்தும் வட இந்தியர்களிடம் பேச்சு கொடுக்க தோன்றியது நான் விவசாயி என்பதால் எதர்தாமாக அவர்கள் கூறியது வேடிக்கையாக இருந்தது

நான்: ஒரு கட்டு கரும்பு என்ன விலைக்கு வாங்குகிறீர்கள்.? ஒரு கட்டு கரும்பில் எவ்வளவு லாபம் பார்க்கிறீர்கள்..?

இந்திகாரன்: ஒரு கட்டு 30 ரூபாய்க்கு வாங்குறோம் இது அரசாங்கம் வாங்கும் விலையை விட மூன்று மடங்கு அதிகம். ஒரு கட்டு கரும்பில் குறைந்த பட்சம் 300₹வரை லாபம் பார்க்கிறோம்.

நான்: இதற்கு உங்களின் முதலீடு என்ன..? இதனால் நீங்கள் சந்திக்கும் பிரச்சினை என்ன..?

இந்திகாரன் : கரும்பு சாறு பிழியும் இயந்திரம் 10ஆயிரம் அது போக டீசல் தினசரி பயன்பாடு, தமிழக காவல்துறை என்றாவது ரோட்டு அருகில் ஏன் கடை போட்டிர்கள் என்று மிரட்டுவார்கள் இரண்டு கரும்பு ஜீஸ் கொடுத்தால் சொன்று விடுவார்கள்..!

நான்: உங்களின் தினசரி வருமானம் எவ்வளவு..? மாதம் இறுதியில் எவ்வளவு மிஞ்சும்..?

இந்திகாரன்: கோடைகாலம் என்பதால் தினசரி 5ஆயிரம் முதல் 6ஆயிரம் வரை வருமானம் வரும் ஆனால் இதில் வாகன வாடகை, வீட்டு வாடகை, குடிநீர், சாப்பாட்டு செலவு எல்லாம் போக மாதம் 45 ஆயிரம் நிற்கும்.

இதெல்லாம் கேக்கும் போது தான் தெரிஞ்சது இந்திகாரண் ஏன் எல்லா இடங்களிலும் சொந்த தொழில் தொடங்குறான்னு, தமிழர்கள் ஏன் வேலை தேடி அலையுறான்னு..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.