நம் முன்னோர்கள் காக்கையை மையமாக வைத்து பல சுவாரஸ்யத்தை சொல்லிருகிரார்கள். அவற்றில் சில

0 554

நம்மை சுற்றி எப்போதும் இருப்பதாலோ என்னவோ காக்கைகளைப் பற்றி நாம் எப்போதும் அதிகம் கண்டுகொள்வது கிடையாது. ஆனால் பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியானது என்று கருதப்படுவது நம் காக்கையார் தான்.

தமிழர்களுக்கும் காக்காவுக்கும் வாழ்வியல் சம்பந்தமான நிறைய தொடர்பு உள்ளது. எங்க ஊரு காக்காக்கள் எங்களுக்கு நிறைய பாடங்கள் சொல்லி கொடுத்திருகின்றன முதல் சீன்ல பாட்டி சுட்ட வடைய திருடிவிட்டு வந்த அதே காக்கா தான் அடுத்த சீன்ல புத்திசாலிதனமாக கொஞ்சமா தண்ணி இருந்த குடுவைல கல்ல போட்டு தண்ணி குடிச்சிட்டு போச்சு.

சென்னையில் இருந்த போது என் அம்மா தினமும் மதிய உணவிற்கு பிறகு ஒரு காக்காவிற்கு ஏதாவது சாப்பிட வைப்பார்கள். தவறாமல் தினமும் அதே நேரத்திற்கு வந்து முதலில் அமைதியாக இருக்கும். ஏதாவது வேலையாக இருந்து ஆகாரம் வைக்க சில நிமிடங்கள் தாமதம் ஆனால் ஒரெ ஒரு முறை “கா” என்று கத்தும்.

அப்படியும் தாமதம் ஆனால் தன் மூக்கினால் ஜன்னல் கண்ணாடியை கொத்தும். வேறு ஏதாவது ரூமில் இருந்தால் மற்ற ஜன்னல்களில் சென்று இதையே செய்யும். ஒரு நாளும் சாதம் உண்ணாது, சப்பாத்தி, பூரி, தோசை, பக்கோடா இது மாதிரி ஏதாவது டிபன் ஐட்டம் மட்டும் தான் சாப்பிடும்.

நம் முன்னோர்கள் காக்கையை மையமாக வைத்து பல பழமொழிகளை சொல்லிருகிரார்கள். அவற்றில் எனக்கு பிடித்த சில

காகம் திட்டி மாடு சாகாது

கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காக்கா

முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

காக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதை

இந்து மதத்தில் இறந்தவர்களின் பிரதிநிதியாகக் காகம் கருதப்படுகிறது. இறந்தவர்களுடைய நினைவு நாட்களின்போது படைக்கப்படும் உணவை தின்ன காகத்தின் வரவு பெரிதும் எதிர்பார்க்கப்படும். வைதீக குடும்பங்களில் முதலில் காக்கைக்கு சோறு போட்டபின்னர்தான் வீட்டிலுள்ளோருக்கு உணவு.

குழந்தையாய் இருக்கையில் நம் முன் வடையை திருடி திரிந்த காகமாய் இறந்தபின் மனிதன் மாறிவிட்டான் என போற்றபடுவது தானோ வாழ்க்கையின் சாராம்சம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.