ஆகாய விமானங்களில் மை நிரப்பிய பேனாவை ஏன் பயன்படுத்தக்கூடாது..?

0 1,012

உயர பறக்கும்போது காற்றழுத்தம் குறைவாக இருக்கும். அழுத்தத்தை ஈடு கட்ட விமானத்தில் உள்ளே செயற்கை அழுத்தத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். சில சமயம் அந்த தேவையான அழுத்தம் சமண்பாட்டுக்கு வரும் முன், ஒரிரு வினாடிகள் குறைந்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் உங்கள் பேனா மை கூடு விட்டு வெளியே வந்து உங்கள் சட்டை பையில் ஓவியம் வரைந்து விடும். அதனால்தான் மை நிரப்பிய பேனாவை விமானப்பயணத்தில் தவிர்க்க வேண்டும்.

.ஆகாய விமானங்களில் மை பேனாவை பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் இல்லை! பயன்படுத்தாமல் இருப்பது நன்று என அறிவுரை மட்டுமே வழங்குகிறார்கள்!

குறிப்பு:

1 மீண்டும் மீண்டும் மை நிரப்பப்பட்டு பயன்படுத்தப்படும் பேனா வகைகளில், நாம் அவற்றை பயன்படுத்த பயன்படுத்த அதில் உள்ள மை-ன் அளவு குறைந்து காற்று அதன் இடத்தை நிரப்புவது இயல்பு!

2 காற்றானது அழுத்தம் அதிகமாக உள்ள இடத்தில் இருந்து அழுத்தம் குறைவான இடத்திற்கு செல்லும் என்பது காற்றின் இயைபு.

3 விமானங்கள் உயரத்தில் இருக்கும்போது அதனுள் காற்றின் அழத்தம், தரையில் காற்றின் அழுத்தத்தை விடக்குறைவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.