இந்த பதிவை பாதிக்கப்பட்ட பெண்ணின் கோணத்திலும், அவர்கள் தாய், தந்தை உறவினர்கள் நிலையில் நின்று யோசித்ததால் மட்டுமே புரியும்…

0 407

பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட வகையில் பலரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்… அதில் சில கருத்துக்களை பகிர்வதையும் பதிவு செய்வதையும் தவிர்க்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்… அதாவது அந்த பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளால் அல்லது போதிய எச்சரிக்கை உணர்வு மற்றும் விழிப்புணர்வு இல்லாமலோ அந்த நிலைக்கு ஆளாகி இருக்கலாம்…

இங்கே பாதிக்கப்பட்ட பெண்களை அப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று தீர்ப்பு கூறுவதை முக்கியமாக தவிர்க்க வேண்டும்…

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களை அநாகரிகமான சொற்களால் கொச்சைப்படுத்தும் வகையில் குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்…

மேலும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம், அறிவுரை கூறுகிறோம் என்ற வகையிலான பதிவுகளையும் தற்பொழுது சிறிது காலத்திற்கு தவிர்க்க வேண்டும்…

ஏனென்றால்
ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்கள் குடும்பத்தினரும் வலியாலும் வேதனைகளாலும் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்… தெரிந்தோ தெரியாமலோ, அறியாமையாலோ அவர்கள் செய்த தவறை உணர்ந்து இருப்பார்கள்…

இப்பொழுது அதை சுட்டிக் காட்டுவது மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் மனதளவில் காயப்படுத்தும்…

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

என்னும் திருக்குறளின் படி நாவினால் அவர்கள் மனதில் ஆறாத வடுவை உருவாக்க வேண்டாம்…

கீழே விழுந்த ஒருவருக்கு முதலில் முதலுதவி செய்ய வேண்டும்… பிறகு ஆறுதல் கூறி அவர்கள் செய்த தவறை சுட்டி காட்டலாம்…

இப்பொழுது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவை முதலுதவி மற்றும் ஆறுதலே… அதை செய்யாமல்

இப்பொழுது இந்த சமுதாயம் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது தவறு என்று கூறிக்கொண்டு இருந்தால் பாதிக்கப்பட்ட பெண்களை அது மேலும் காயப்படுத்தும்… அந்த காயம் அந்த பெண்களை தற்கொலைக்கும் முயல செய்யும்… மேலும் புகார் கொடுக்கவும் முன்வர மாட்டார்கள்… எனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்பொழுது ஆறுதலான பதிவுகளை பகிர்வோம்… அவர்களை காயப்படுத்தும் பதிவுகளை தவிர்ப்பது சிறந்தது…

இது ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் கோணத்திலும், அவர்கள் தாய், தந்தை உறவினர்கள் நிலையில் நின்று யோசித்ததால் மட்டுமே புரியும்…

இது பெண்களின் உறவினர்களின் கோரிக்கை மற்றும் பதிவு…
நன்றி

You might also like

Leave A Reply

Your email address will not be published.