இளம் வயதில் சொந்த தொழில் ஈடுபடுவதில் நன்மைகள் இவை..! நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்..।

0 362

என்னுடைய 22 வயதில் நான் சில நண்பர்களுடன் ஒரு தொழில் தொடங்கினேன். ஐந்து ஆண்டுகள் தொழிலை நடத்தி ஒரு நல்ல நிலைக்கு வளர்த்தோம். 27 வயதில் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது கடினம் என்று ஒரு சூழல் வந்தது. நண்பர்கள் அனைவரும் நல்ல வேலைகளைத் தேடிக் கொண்டு தொழிலை நிறுத்தி விட்டோம். அந்த ஐந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவங்கள் இன்றும் பணியில் எங்களுக்கு உதவுகின்றன. இளம் வயதில் தொழில் தொடங்கியதால்,

  1. நான் பெரிய கடன் சுமைகளுக்குள்ளோ குடும்பச் செலவுகளுக்கு உள்ளோ சிக்கிக் கொள்ளவில்லை. அந்த சுதந்திரம் பெரிய பலம்.
  2. தோல்வியை நினைத்து அதிகம் பயந்ததில்லை. அதுவே பல வெற்றிகளைத் தந்தது.
  3. முப்பது வயதுக்குள் ஒரு தொழிலின் அனைத்து அம்சங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. இது தரும் பக்குவமும் முதிர்ச்சியும் விலைமதிக்க முடியாதது.
  4. ஒரு வேளை பெரிய வெற்றி அடைந்திருந்தால் வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே வெற்றி அடைந்த பேர் கிடைத்திருக்கும். ஆனால் வெற்றி அடையாதது தோல்வி அல்ல என்ற புரிதல் கிடைத்திருக்கிறது.
  5. நாளை இன்னொரு தொழில் தொடங்க நினைத்தால் முதல் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை வைத்து பல நல்ல முடிவுகளை விரைவாக எடுக்க முடியும். அந்த வயதில் பரிசோதனை ரீதியில் முடிவுகள் எடுக்க அவ்வளவு சுதந்திரம் இருக்காது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய பலம்.
  6. என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் கிடைத்திருக்கிறது. இதை விட வேறு என்ன…

பதிவு: கோமதி சங்கர்

பகிருங்கள் யாருக்கேனும் வாய்ப்பை ஏற்படுத்தும்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.