அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள் தேவை முடிந்தபின்பு – நடுத் தெருவில் போடாதீர்கள் அரும்புகளும் அதைக்கண்டு அர்த்தம் தேடித் தவிக்கிறது…

1 605

ஆணுறையோ பெண்ணுறையோ
அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள்
தேவை முடிந்தபின்பு – நடுத்
தெருவில் போடாதீர்கள்
அரும்புகளும் அதைக்கண்டு
அர்த்தம் தேடித் தவிக்கிறது…

.
மாதவிடாய் என்பது – பெண்
மகத்துவத்தில் ஒன்றாகும்
வீதியில் போட்டு நீங்களும் – அதனை
விளம்பரம் செய்யாதீர்
நெகிழிப்பையில் முடித்து
குப்பையலிட மறவாதீர்….
.
இரவுகென்றுப் பல உடைகள்
விருப்பம்போல் அணியுங்கள்
ஆனால் அறிவின்றி அதனோடே
சந்தைவரை செல்லாதீர்
ஆடவரைத் தூண்டாதீர்..
.
பொதுக் கழிப்பிடங்கள்
போதுமானவரை உண்டு – இனியும்
மூச்சடைக்க வைக்காதீர்
விலங்கினம் போல் வீதியிலே கழிக்காதீர்…

.
சின்னஞ்சிறு குழந்தைகளும்
உண்டுக் களிக்கிறது பலகாரம்
தள்ளுவண்டித் தோழமைகளே
கைகள் சுத்தம் செய்ய மறவாதீர்
குழந்தைகளைப் பேணத் தவறாதீர்..
.
வீசும் குப்பைக் காற்றில் பறந்து
வாகன ஓட்டியின் மேல் விழுந்து
நிலைத்தடுமாறி விபத்துகளும் நிகழக்கூடும்
குப்பைகளைத் தொட்டியில் போடப் பழகிடுவீர்…
.
நன்மைக்கென்றுப் புரிந்திடுவீர் – நம்
செல்வங்களின் நலன்கருதி நடந்திடுவீர்
பாதிக்கப்படுவோரில் நாமும் அடக்கம் – எனவே
சுகாதாரம் கடைபிடிப்பீர் – நம்
சுற்றுப்புறம் காத்திடுவீர்..

(நாசூக்கா சொல்லத் தெரியலங்க…. சில கன்றாவிகள சகிக்க முடியலங்க….)

முகநூல் பகிர்வு.

You might also like
1 Comment
  1. S.Stanlin Prabhu says

    Good information.

Leave A Reply

Your email address will not be published.