கார்ப்பரேட் உலகத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள்: உங்களுக்கும் இந்த அனுபவம்

0 467
  1. மூளையில் சரக்கு இருந்தால் மட்டுமே வேலை மூளை காலி என்றால், வேலை காலி.
  2. மேலாளரை பற்றி யாரிடமாவது குறை சொன்னால், நாம் என்ன குறை சொன்னோம், எப்ப சொன்னோம் என்பது முதற்கொண்டு மேலாளருக்கு தெரிந்துவிடும்.
  3. சொம்பு அடித்தால் மட்டுமே நல்ல ரேட்டிங் கிடைக்கும்.
  4. கார்ப்பரேட் உலகில் யாரும் ஜாதி, மதம் பார்ப்பதில்லை என்பது வடிகட்டிய பொய்.
  5. வாடிக்கையாளர்களை ராஜாவாக நடத்தினால், வாடிக்கையாளர் நம்மை ராஜாவாக ஆக்குவான்.
  6. கண்காணிக்க யாரும் இல்லை என்பது போல தெரியும், ஆனால் எல்லோரும் கண்கணிக்கப்படுவார்கள்.
  7. எல்லோருக்கும் வேலைக்கு சிபாரிசு செய்தால் ஆபத்தில் முடிந்து விடும்.
  8. ஒரு முறை விடுமுறை அன்று அலுவலகம் வந்தால், எல்லா விடுமுறைக்கும் அலுவலகம் வரவைக்கபடுவார்கள்.
  9. ப்ரோமோஷன் வேண்டும் என்றால் பொறுமை வேண்டும். இங்கு பொறுத்தார் ப்ரோமோஷன் பெறுவார்.
  10. கடன் வாங்கி வீடு கார் வாங்கக்கூடாது. சேமிக்க கற்று கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு இது போதும். எப்போதெல்லாம் தோன்றுகிறதோ,அப்போதெல்லாம் வந்து எழுதுகிறேன்.

Qura பகிர்வு: பிரவீன் குமார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.