இட்லிக்கும் ஒரு கரண்டி மாவு தான். தோசைக்கும் ஒரு கரண்டி மாவு தான். இட்டிலியின் விலையை விட தோசையின் விலை கூடுதலாக இருக்க காரணம் என்ன?

0 461

காரணம் ஒன்றே, தோசைக்கு கூடுதல் கவனம் தேவை, ஆதலால் கூடுதல் விலை.

விளக்கமாக சொல்லவேன்றும் என்றால், இட்லி – மாவை ஊற்றி மூடிவைத்தால் போதும், சற்றுநேரத்தில் விடை கிடைத்துவிடும், ஒரு ஆள் அதன் அருகில் நின்று பார்க்கவேன்றும் என்று ஏதும் கிடையாது, ஒரே நேரத்தில் ஒரே பொருள் செலவில் ஐம்பதுக்கு மேல் அவித்துவிடலாம்.

தோசை – அதே மாவுதான், ஆனால் கூடுதலாக எண்ணெய் தேவை, ஒரு ஆள் கூடவே நிற்கணும், ஒரே நேரத்தில் ஒரே பொருள் செலவில் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தான் சுட முடியும்.

வேடிக்கையாக சொல்லவேன்றும் என்றால், இட்லி – பள்ளியில் ஆசிரியர் நடத்தும் போதே பாடங்களை புரிந்துகொள்ளும் மாணவன்.

தோசை – சிறப்பு வகுப்பு தேவையான மாணவன்

சற்று உற்று கவனியுங்கள், தோற்றம் குணாதசியம் கூட ஒற்றுப்போகும்.

பதில படிச்சி கேவபடதீங்க இப்புடியெரு கேள்விய கேட்டவர நினச்சி பாருங்க..!

Less tension more work..

You might also like

Leave A Reply

Your email address will not be published.