வானகத்திற்கு பயிற்சிக்கு வந்தவர்களில் பெரும் நம்பிக்கை அளித்தவர்களில் ஒருவர் , காயத்திரி அக்கா…

0 267

எளிமையாக , மிக அழகான ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கி வருகிறார்.

ஆதியாழ் வனம்,
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம்.

கடந்த 26-02-2019 மாலை நண்பர்களுடன் ஆதியாழ்வனத்திற்கு சென்றிருந்தேன்.

எளிமையான மண் வீடு
ஆடு ,மாடு , கோழி , மணி வாத்து , கூஸ்வாத்து…

செடி&கொடி காய்கறிகள் ,கீரை , வாழை , மூங்கில் , பல வகை மரங்கள் என தோட்டம் சிறிய அளவில் செழிப்பாக உள்ளது.

தோட்டத்தில் விளைந்த சக்கரவள்ளிக் கிழக்கு , நிலக்கடலை வருவல் , மல்லி காப்பி கொடுத்து வரவேற்றார்.

இப்போது வரை வீட்டிற்கு மின்இணைப்பு எடுக்காமல் , சூரிய வெளிச்சத்தில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.

வானகத்தில் காயத்திரி அக்கா பயிற்சியில் இருக்கும்போது , அவர்களிடம் கேட்டேன்,

“உங்களுக்கு இயற்கை விவசாயத்துல எப்படிங்ககா ஆர்வம் வந்துச்சு?” -ன்னு

” நா பொறந்து வளந்ததெல்லா சென்னை. திருமணத்துக்கு அப்பறொம் குடும்பத்தோடு மைசூர்-ல செட்டிலாகிட்டோம்.

சமைக்குறது , குழந்தைகள பாத்துக்குறது , வீட்ட சுத்தஞ்செய்யுறது இதுமட்டுந்தா வாழ்க்கையா இருந்துச்சு.

“இதுக்குத்தா பொறந்தனா? “-ங்கற கேள்வி எனக்குள்ள வந்துச்சு.

சரி ஏதாவது புதுசா பன்னலாம்னு YOUTUBE-ல தேடீட்டு இருந்தப்ப #நம்மாழ்வார் ஐயா வோட VIDEOS பாக்க ஆரம்பிச்சேன்.

என வானகம் வந்த கதை-ய சொன்னாங்க.

வானகத்துல இருக்கும்போது ஆதியாழ் வனம் -னு தலைப்போட ஒரு spiral binding புத்தத்துல குறிப்பெடுத்துட்டு இருந்தாங்க.

என்னன்னு கேட்டேன்.

“இது என்னோட பொண்ணுங்களுக்காக தயாரிக்குற புத்தகம்( வேளாண்மை & மருத்துவம் என வாழ்வியல் சார்ந்தவை நிறைய அதில் இருந்தது). அதுனாலதா இதுக்கு பேர் #ஆதியாழ்_வனம். இதுதா நாங்க உருவாக்கப்போற தோட்டத்தோட பேரு.” என கூறினார்.

படத்தில் உள்ள பெரிய பாப்பா ஆதிரை , சின்ன பாப்பா யாழ்.

இயற்கை வாழ்வியல்-ல இவ்வளவு உறுதியா இருக்குற பெண்களைப் பாத்தா நம்மாழ்வார் ஐயா ரொம்ப சந்தோசப் பட்டுருப்பாரு -னு நெனச்சுட்டே ஆதியாழ் வனத்திலிருந்து விடைபெற்றோம்.

தேவை பேசும் மாதிரிகளல்ல வாழும் மாதிரிகளே…

பதிவு: செந்தில் குமரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.