தனக்கு முன்னால் AK 47 வைத்து இருக்கும் எதிரியை சுட்டு வீழ்த்தினால் எப்படி இருக்கும் அப்படி ஒரு செயல் தான்… தீரன் அபினந்தன் வர்தமான் ,

2 2,693

போர்_விமானம் ஒரு பார்வை

(Mig 21 V/S F-16 )
ஒருவன் கையில் பழைய ரிவால்வரை வைத்து கொண்டு தனக்கு முன்னால் AK 47 வைத்து இருக்கும் எதிரியை சுட்டு வீழ்த்தினால் எப்படி இருக்கும் அப்படி ஒரு செயல் தான்… தீரன் அபினந்தன் வர்தமான் , Mig 21 விமானத்தை வைத்து F-16 ஐ வீழ்த்திய சம்பவம்.
(உலகில் F 16 யை சுட்டு வீழ்த்திய முதல் F 16 ஷூட்டர் விங் கமாண்டர் அபினந்தன் தான்.)

இது ஏன் அவ்வளவு பெரிய சாகசம் ??
காரனம் அபினந்தன் ஓட்டி சென்ற மிக்21 என்பது அரத பழசான .. ஆயுள் முடிந்த 2 ஆம் மற்றும் 3 ஆம் தலை முறை விமானம் .
இதில் விபத்து வாய்ப்பு மற்றும் கோளாறு வாய்ப்பு அதிகம் என்பதால் இதை” flying coffin “என்று அழைக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
ஆனால் எதிரி ஓட்டி வந்த F 16 சக்தியில் அட்வான்ஸ் தொழில் நுட்பத்தில் … ஆற்றலில் முற்றிலும் மேம்பட்ட 4 ஆம் தலை முறை விமானம்.

இதை எதிர்க்க சரியான ஆள் நம்மிடம் உள்ள miraj 2000 மட்டுமே..(முதல் நாள் தீவிர வாதிகள் முகாமில் பாம் போட்டது இது தான் ) ஆனால் அதை அனுப்பாமல் இதை அனுப்பிய காரணம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்வது.. அந்த நேரத்தில் ‘ஸ்ரீ நகரில் ஏர் பேஸ்’ல் available ஆக இருந்தது இதுமட்டும் தானாம்.
(இதற்க்கு back up காக கிளம்பி சென்ற sukhoi .. கூட பஞ்சாப் பேஸ் இல் இருந்து கிளம்பி தாமதமாக தான் சென்று சேர்ந்தது )

இந்த விமானங்கள் என்ன என்ன வகையில் எல்லாம் உள்ளது ..? இவைகளின் ஆற்றல்கள் என்ன ?இந்த விமானங்களை பற்றி கொஞ்சம் விரிவாக பார்த்தோமேயானால்……

Mig 21 வகை விமானங்கள் இந்தியாவில் 1963 இல் இறக்குமதி செய்ய பட்டவை. இந்த மிக் 21 என்பது ரஷ்யாவின் Mikoyan-Gurevich எனும் Design Bureau வால் 1959 வாக்கில் தயாரிக்க பட்டவையாகும். (அதன் பெயர் சுருக்கம் தான் MIG )

அதே சமயம் ‘பாக்’கின் F 16 அங்கே 1983 ஆம் ஆண்டு இறக்கு மதி செய்ய பட்டது. இந்த விமானங்கள் அமெரிக்காவை சேர்ந்த General Dynamics Lockheed Martin எனும் ஆயுத தயாரிப்பாளர்களால் 1978 ஆம் ஆண்டு அறிமுக படுத்த பட்டவை.

போர் விமானங்களை ஒப்பிடுவதற்கு முன் அவற்றை பற்றி சில பொதுவான விஷயங்களை அறிந்து இருப்பது முக்கியம். அவற்றை கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்…

பொதுவாக விமானத்தை வகை படுத்தும் போது அவற்றின் எடை மற்றும் இன்ஜின் சக்தியை வைத்து அவற்றை ..
low ..
medium..
high …
என்று வகை படுத்துவார்கள்.
இதில் low என்பது single engine கொண்டது இவற்றில் இன்ஜின் ஆற்றல் குறைவு மேலும் operational radius உம் குறைவு .mig 21 மற்றும் thejas இந்த வகை தான். (இதில் thejas கொஞ்சம் அட்வான்ஸ்.. மற்றும் இந்திய தயாரிப்பும் கூட )

Medium : இவைகள் ஒற்றை அல்லது இரட்டை இன்ஜின் கொண்டு இருக்கலாம் (உதாரணம் : mig 29 ,rafale, miraj.)

Heavey : இவைகள் அளவில் பெரியது இரட்டை இன்ஜின் கொண்டது high oparational radius கொண்ட இரட்டை சீட் விமானங்கள் இவை . உதாரணம் நம்மிடம் உள்ள sukhoi 30 (இதுவும் ரஷ்யன் தயாரிப்பு தான் )

இதே போல விமானங்கள் அவைகளின் செயல்திறன் அடிப்படையில் வகை படுத்துவார்கள்.
அது…

Strike fighter..
Intersepter…
Air superiority..
Multy role… மற்றும்
Bomber

இதில் strike fighter என்பது ground target களை குறிவைத்து தாக்க உண்டாக்க பட்டது.. இவற்றின் ரேடார் ground டார்கெட் ஐ பிடிக்கும் படி optimized செய்ய பட்டது.. இவற்றால் தாழ்வாக பறக்க முடியும்.
இவைகள் AGM மிசைல் (air to ground ) தவிர தற்காப்புக்கு air to air மிசைல் கொண்டு போக முடியும்.
(உதாரணம் : ஜாகுவார், மிராஜ் 2000 , mig 27)

அடுத்து Intersepter என்பது நமது எல்லைக்கு நுழையும் பாமர் வகை விமானத்தை அழிக்க வடிவமைக்க பட்டது.. இவைகள் விரைவில் உயரம் எட்டும் திறன் கொண்ட விமானங்கள் .
(வெறும் interseper வகை என்று இப்போது யாரும் பயன் படுத்துவது இல்லை இந்த வசதி வேறு மற்ற பேக்கேஜ் உடன் இனைந்து வந்து விடுகிறது இப்போது)

அடுத்து Air superiority இவைகளும் முன்பு பார்த்தது போல தான். ஆனால் இவைகளின் gps air target ஐ மைய படுத்தி அமைந்து இருக்கும் வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடியவை இவை.( உதாரணம் sukhoi 30 மற்றும் mig 29 )

Multy role : மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரே விமானம் செய்தால் அதான் multy role

Bomber : வெறும் பாமை மட்டுமே போட்டு கொண்டு போகும் வகை..( இந்த வகை நம்மிடம் இல்லை இதன் தேவையை மற்றவையே தீர்த்து விடுவதால் இவற்றிற்கும் அவசியம் இல்லை)

போர் விமானங்களில் hot point என்று சொல்ல கூடிய அதாவது விமானத்தில் மிசைல் மற்றும் பாம் வைத்து கொண்டு போகும் இடம் (பொதுவாக விமானத்தின் வயிற்று பகுதியில் இவைகள் இருக்கும் ) இதை பார்த்தே இது எந்த வகை விமானம் என்று ஓரளவு கூறி விட முடியும்.

மேலே சொன்ன எல்லாவற்றையும் இணைத்து பார்க்கும் போது சில வகையில் சில சாதகமும் அதே சமயம் பாதகமும் உண்டு.
உதாரணம் அளவு சின்னதாய் இருந்தால் சின்ன ஆப்ரேஷன் களுக்கு பயன் படுத்தலாம் ஆனால் அதிக எடை வெடி மருந்து கொண்டு போக முடியாது..
அதிக எடை கொண்ட விமானத்தில் அதிக ஆயுதம் கொண்டு போகலாம் ஆனால் சின்னதை போல வேகமாக உயரம் எட்ட முடியாது..

இதை தவிர இன்னோரு விஷயம். மல்டி ரோல் விமானங்களின் செயல் பாடு அந்தந்த தனி செயலுக்காக உண்டாக்க பட்ட வகையை விட குறைவான ஆற்றல் தான் கொண்டு இருக்கும்.
அதாவது ஒரு மல்டி ரோல் வகை சேர்ந்த sukhoi 30 கிரவுண்ட் டார்கெட்டை தாக்குவது என்பது அதற்காகவே உண்டாக்க பட்ட மிராஜ் 2000 ஐ விட செயல்திறன் ஆகட்டும் ,ரேடார் ஆப்டிமைசிங் ஆகட்டும் குறைவான செயல்பாடே கொண்டு இருக்கும்.

ஆனால்……

மேலே சொன்ன படி ரேடார் ஆப்டிமைசிங் ஆகட்டும்.. ஆயுதம் கொண்டு செல்வது ஆகட்டும்.. விரைந்து பறப்பது ஆகட்டும்… உயரம் எட்டுவது ஆகட்டும்.. அனைத்து ஆப்ரேஷனையும் ஒரே ஆளாய் செய்ய கூடிய.. அதே சமயம் ஆற்றலும் குறையாத சகலகலா வல்லவன் ஒருவன் உண்டு என்றால் அது தான் ..

“rafale ”

விரைவில் rafale இந்தியா வர இருக்கின்றன (இந்த ரபேலிலும் ஊழல் செய்திருக்கும் நம்ம ஆளுங்கள என்ன சொல்றது என்பது வேறு விஷயம் )
ஆனால் …

வெறும் 15 கோடி விலை கொண்ட ஓல்ட் மாடல் mig 21 ஐ கொண்டு 250 கோடி விலை கொண்ட அதி நவீன F-16 ஐ வீழ்த்தும் ஆற்றல் கொண்ட வீரர்கள் கையில்” rafale ” ஐ கொடுத்து அனுப்பினால் எதிரி கதி என்னவாக இருக்கும் என்பது…
எதிரிகளின் கற்பனைக்கே.

பதிவு : ரா.பிரபு

You might also like
2 Comments
  1. Durai Raj venkatesan says

    congradulations brother. great salute. jai hind. ini oru vidhi seivom. bharat mathaki jay…..

  2. KATHIRAVAN kRISHNAMURTHI says

    பாக்கிசுத்தான் F-22 எனும் இன்னும் அதி நவீன அமெரிக்காவிடம் கேட்டு நின்றது..பத்து ஆண்டுகளுக்கும்மேல் இழுவையில் உள்ளது…இந்தியாவில் எல்லாப் பழுதும் பார்க்க முடுவதாலேதான் பழையதைக் கொண்டும் ஓட்டுகின்றோம். அதற்கு HAL என்ற பொது நிறுவனத்தில் உள்ள அனுபவசாலிகளே காரணாம். அதை விடுத்து தனியார் இடம் கொடுப்பதை நிறுத்துவார்களாக.

Leave A Reply

Your email address will not be published.