இனிப்பு அதிகமா சாப்புட்டா கீரிபூச்சி வருமுன்னு சின்ன பிள்ளையில சொல்லுவாங்க..!

0 375

ஒட்டுண்ணிகளான புழுக்கள் உடலில் நுழைந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை தின்று உங்கள் குழந்தையின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது.

வயிற்றில் பூச்சி என்பது பிள்ளைகளுக்கு பெரும் தலைவலியை தர, அம்மாக்களையும் கவலை அடைய செய்கிறது. ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள் நம் உடலில் நுழைந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை தின்று உங்கள் குழந்தையின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது. இந்த புழுக்களை நீங்கள் அவ்வப்போது விரட்டி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நோய்களை தாங்கும் எதிர்ப்பு சக்தி என்பது இல்லாமல் போய்விடும்.

வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் நீங்கள் உண்ணும் உணவு செரிமான மண்டலத்துக்குள் செல்லாமல் வயிற்று போக்கை ஏற்படுத்தக்கூடும். அத்துடன் வாயு தொல்லை, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஒருவித எரிச்சலும் காணப்படும். நார்ச்சத்து உணவை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் பிரச்சனையை போக்கலாம். ஒருவேளை நார்ச்சத்து உணவையும் எடுத்துக்கொண்டு இப்பிரச்சனை இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

மலவாயில் அரிப்பு ஏற்பட இதனால் இரவில் தூக்கம் கெட்டு தேவையில்லாத களைப்புடன் ஒருவர் காலையில் காணப்படவும் கூடும். குழந்தைகளுக்கு இப்பிரச்சனை பெரிதும் காணப்படுவது வழக்கம். அப்படி என்றால் அவர்கள் வயிற்றில் பூச்சுக்கள் இருக்கிறது என அர்த்தமாகும்.

வயிற்றில் புழுக்கள் இருந்தால் எவ்வளவு தான் நாம் சத்தான உணவை சாப்பிட்டாலும் அதை உறிஞ்சி ஒருவித சோர்வை உங்கள் குழந்தைகளுக்கு தருகிறது. வாரத்திற்கு ஒரு முறை வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க வேண்டியது அவசியமாகும்.

பசி எடுக்காமல் இருப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அதாவது புழுக்கள் நம் வயிற்றில் அதிகளவில் பெருகி இருக்க அப்போது சாப்பிடும் சாப்பாடு என்பது செரிமான மண்டலத்தை எட்டாது. இதனால் பசி என்பது அற்று உங்கள் குழந்தையின் உடல் காணக்கூடும்.

புழுக்கள் உடலில் இருந்தால் பற்களை கொறிப்போம். இதற்கு காரணம் உடலில் தேங்கிய வழியும் புழுக்களால் தேவையற்ற மன அழுத்தம் கொண்டு நாம் பற்களை என்ன செய்வதென அறியாது செய்வோம். உங்கள் குழந்தைகள் இரவில் படுக்க செல்லும்போது பற்களை கொறித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம்.

அதேபோல் உடலில் ஏற்படும் இரத்த சோகை போன்றவை ஏற்பட காரணம், உருளை புழுக்கள் உங்கள் குழந்தைகள் சாப்பிடும் இரும்பு சத்து, வைட்டமின் அடங்கிய உணவை உறிஞ்சுவதாலே ஆகும். உடலில் ஒட்டுண்ணிகள் இருந்தால் சரும அரிப்பு மற்றும் எரிச்சல் கூட சில சமயத்தில் ஏற்படும். இந்த அறிகுறிகளெல்லாம் உங்களுக்கு காணப்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்‌.

You might also like

Leave A Reply

Your email address will not be published.