இரண்டே நிமிடம் செவி வழியாக கேட்ட ஒருத்தனின் வாழ்க்கை கதை, உண்மை சம்பவம்

0 782

இரண்டு மணி நேரமாக என்னை அறியாமலேயே கண்ணீரும், வருத்தமும் என்னை ஆட்கொள்கிறது..????????????????

காரணம் தெரியவில்லை, ஆனால் இப்படியும் வாழ்க்கை இருக்கிறது என உணர்ந்த தருணம் அந்த இரண்டு நிமிடங்கள்..

“தனக்கு நடக்காத வரை இங்கு எதுவும் தவறில்லை என்ற மனநிலை” என்ற எனது வார்த்தைகளை அந்த நிமிடம் கண் முன் வந்து நின்றது..

கடந்த இரண்டு வாரமாக மதியம் 2 மணியளவில் மதிக்கத்தக்க அந்த நபரை கவனித்து கொண்டிருக்கிறேன், என் கடைக்கு அருகிலுள்ள கடைக்கு வந்து 1 ரூபாய்க்கு பீடி வாங்கி பற்ற வைத்து எதையோ நினைப்பார், பிறகு அப்படியே நடப்பார்..

( அவர் அத்தகைய நேர்த்தியாக உடை அணிந்திருப்பார், அவரை பார்ப்பவர்கள் அவரே மனநிலை சரியில்லாதவர் என கூற மாட்டார்கள், அவர் மனநிலை சரியில்லை என என் தந்தை கூறும் வரை நானே நம்பவில்லை.. மனநிலை சரியில்லை என்றால் பைத்தியம் என்று அர்த்தம் இல்லை, இந்த உலகத்தில் யாரும் வாழ முடியாத வாழ்க்கை தான் மனநிலை சரியில்லாத வாழ்க்கை )

இந்த உலகத்தில் யாரும் விரும்பாத, யாரும் ஆசைப்படாத, ஏன்..? யாரும் அந்த வாழ்க்கையை ஒரு நிமிடம் கூட நினைச்சு பார்க்காத ஒரு வாழ்க்கை இருக்கிறது..

அந்த வாழ்க்கையை நாம் ஒருபோதும் நினைத்து பார்த்திருக்க மாட்டோம்..

இன்று மாலை ஒரு 4 மணியளவில் அவர் என் கடை வழியாக நடந்து போகும் போது என் தந்தையை பார்த்து நாளைக்கு பணம் தருகிறேன் என்றார்..

நான் எவ்ளோ பணம் என்று என் தந்தையிடம் கேட்டேன், அதற்கு என் அப்பா ஒரு ரூபாய்க்கு மதியம் பீடி வாங்கினான்.. அதை தான் நாளைக்கு தருகிறேன் என்றான் என கூறியதும் ஒரு நிமிடம் என்னை அறியாமலேயே ஒரு ரூபாய் கூட இல்லாமல் இங்கு மனிதர்கள் இருக்கிறார்களா..? என்ற கேள்வி..

அவனைப்பற்றி என் அப்பா மேலும் சொன்னதும், தானாகவே கண்ணீர் வந்தது..

அவர் வீட்டுக்கு ஒரே பையன் என்றும், மதுரையில் பொறியியல் படிப்புக்கு சிறந்த கல்லூரியில் அவர் B.E, M.E படித்தார் என்றும்,

ME இறுதி ஆண்டில் படிப்பு அதிகம் மன உளைச்சலால் மனநிலை வேறு மாதிரியாக சென்று விட்டது.. அப்போது அவ்ளோ பாதிப்பு இல்லை..

அதோடு வேலையும் கிடைக்கவில்லை என்பதால், அவரின் மனது ஏதோ ஒரு வெறுப்பின் உச்சத்திற்கு சென்றது என என் அப்பா கூறினார்..

திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில், அதையும் செய்ய ..

வேலை இல்லை, மனநிலை சரியில்லை என்ற காரணத்தை கூறி அவரின் மனைவி பிரிந்து சென்று விட்டார்..

அப்பாவும் இறந்து விட, தற்போது அவரின் அம்மா வீட்டுவேலை செய்து மகனை காப்பாற்றுகிறார்

அவருக்கு வயது எவ்ளோ என கேட்டேன், 34 தான் இருக்கும் என அப்பா கூறினார்..

தற்போது அவர் தினமும் தெரிந்தவர்களிடம் ஒரு ரூபாய் கேட்கிறார், பீடி வாங்குவதற்காக

34 வயதிற்குள் ஒரு மனிதனின் வாழ்க்கை இத்தகைய துன்பமிகுந்த வாழ்க்கையாக மாற்றம் அடையுமா..?

இதை ஏதோ என்னால் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை.. காரணம் இதுபோல் எத்தனை பொறியியல் படித்தவர்கள் இருக்கிறார்களோ..? என யோசித்தேன்..

உலகமயமாக்கல் என்ற ஒன்று ஒருத்தனின் வாழ்க்கையை இந்த அளவிற்கு மாற்றுமா..?

நான் கூறியது உலகமயமாக்கலை நம்பி, படித்தால் நல்ல நிலைமைக்கு சென்று விடலாம் என்ற நம்பிய நடுநிலை வர்க்க குடும்பத்தின் பையனின் நிலைமை இதுதான் போல ????????????

இது ஏதோ சிறு பிரச்சனையாக உங்களுக்கு தெரிந்தால், ஒருநாள் நான் சந்தித்த நபரை போல் நீங்களும் சந்திப்பீர்கள்..

ஏனெனில் பொறியியல் என்ற படிப்பின் உலகம் மிகச்சிறியது

ஆனால் அதுதான் இங்கு சொகுசான வாழ்க்கையை தருமென நம்ப வைக்கப்படுகிறது..

இந்த சமூகத்தில் யாரும் பார்க்காத, யாரும் வாழ விரும்பாத வாழ்க்கையை பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

வீட்டுக்கு ஒரே செல்ல மகன், தலைசிறந்த கல்லூரியில் ME படித்து ஒரு ரூபாய்க்கு கூட இல்லாமல் மற்றவர்களிடம் கையேந்தி நிற்பது ???????????????????? என்ன மாதிரியான வாழ்க்கை..

இந்த பதிவு எழுதிய நிமிடங்கள் மீண்டும் வரக்கூடாது என்றே விரும்புகிறேன்..

உங்கள் கருத்தை கமெண்ட்ல கூறுங்கள்..

உவன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.