இன்னும் ஒரு நண்பர் பூமி தட்டையானது என வாதாடுகின்றார். இவரை என்ன செய்வது..?

0 216

அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள்! 🙂

இதற்கு அறிவியல் பூர்வமான பல விளக்கங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து சுவாரசியமான ஒன்றைப் பகிர்கிறேன். முடிந்தால் உங்கள் நண்பரை இதைச் செய்யச் சொல்லுங்கள்.

துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்துக்கு, சூரிய அஸ்தமனத்துக்குச் சில நிமிடங்கள் முன்பு உங்கள் நண்பரை யாருடனாவது போகச் சொல்லுங்கள் – முடிந்தால் உங்களையே கூட்டிப் போகச் சொல்லுங்களேன்! சுற்றிப் பார்த்தது போலவும் ஆச்சு!.

நண்பரைக் கீழே நிற்கச் சொல்லிவிட்டு, நீங்கள் அந்தக் கட்டிடத்தில் இருப்பதிலேயே மேலே உள்ள தளத்துக்குச் செல்லுங்கள். இருவரும் காணொளி அழைப்பில் (video call) இணைந்திடுங்கள்.

பின்பு நண்பரை சூரிய அஸ்தமனத்தை அலைபேசியில் காட்டச் சொல்லுங்கள். அவர் காட்டுகையில் சூரியன் முற்றும் மறைந்து முடிந்த அடுத்த நொடி, நீங்கள் உங்கள் அலைபேசியைக் கொண்டு சூரியன் மறையும் திசையை அவருக்குக் காட்டுங்கள். அவரும் சரி, நீங்களும் சரி – சூரியன் இன்னும் அஸ்தமனம் ஆகாமல் இருப்பதைப் பார்க்கலாம்! ஓரிரு நிமிடங்கள் கழித்தே நீங்கள் பார்க்கும் சூரிய அஸ்தமனம் நடக்கும்.

ஏனிப்படி? ரொம்பச் சுலபம் – புர்ஜ் கலிஃபா அவ்வளவு உயரமான கட்டிடம். எனவே, தொடுகோட்டில் அவருக்கு மறைந்த சூரியனை உங்களால் மீண்டும் காண முடிகிறது. காரணம் – நீங்கள் காணும் தொடுகோடு வேறு, அவர் காணும் தொடுகோடு வேறு. அதற்குக் காரணம் – உலகம் உருண்டை; தட்டையல்ல!.

உங்களில் பலருக்கு இந்த சந்தேகம் இருப்பின் பகிர்ந்து நண்பர்களுடன் தெளிவு படுத்தி கொள்ளுங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.