லாரியோ, பேருந்தோ பழுதாகி நின்றால் வேப்பமரத்து கிளையும், நெய்வேலி காட்டாமணி செடிகள் மட்டுமே வாகனம் பழுதாகி நிற்க்கின்றன என்றுஅறிவிக்க வைக்க காரணம் என்ன

0 1,363

சாலை விபத்துக்களுக்கு பொதும்க்களின் அலட்சியம் முக்கியகாரணம்தான்…. அதை மறுக்க முடியாது.. நெடுஞ்சாலை விபத்துக்கு முக்கியகாரணம் தூக்கம் இல்லாமல் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவதும், சாலை விதிமுறைகளை மதிக்காததும்தான்…

காலம் காலமாக தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் நின்ற லாரியில் மீது வாகனங்கள் மோதி உயிர் இழப்பது சர்வசாதாரணமாகிவிட்டது…. நேற்று நடந்த பல விபத்துக்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றன.

ஒருவேளை லாரி லோடுபுல்லா இருக்கும் போது டயர் வெடித்து ரோட்டில் நின்றால் அதை எப்படி ஓரம் கட்டுவது… உண்மைதான் அதை ஒரம் கட்ட முடியாதுதான்.. ஆனால் லாரி பழுதாகி நின்று விட்டது என்று பத்து மீட்டருக்கு முன் அறிவிப்பாக இரவு நேரத்தில் ஒளிரும் முக்கோண ரிப்ளெக்டர் வைக்க வேண்டும்.. ஆனால் பழுதாகி நின்ற எந்த லாரிக்கு பின்னால் இப்படிபட்ட அறிவிப்பை நான் எங்கேயும் பார்த்தது இல்லை…

அந்த முக்கோண ரிப்ளெக்டர் ஒரு கோடி ரூபாய் இருக்குமா? சரி தனியார் லாரிகளை விடுங்கள்.. அரசு பேருந்துகள்.. பழுதாகி நின்றால் அறிவிக்க இந்த முக்கோண ரிப்ளெக்ட்ர் இருக்கின்றதா? என்றால் இல்லை….

எப்படி சாலையை கடக்க வேண்டும்..? சிக்னலில் எப்படி நிற்க்க வேண்டும்? என்று முதலில் இருந்து மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் விழிப்புனர்வு எற்படுத்துவது நமது கடமை அல்லவா… மிக முக்கியமாக வெகுஜன ஊடகங்கள் இதனை திரும்ப திரும்ப சொல்லிக்கொடுக்க வேண்டும்.


விபத்தில் இறந்தவர்களை விட டிவியில் பத்து பேர் படுகாயம் அடைந்தவர்கள் என்று செய்தி வரும் போது அந்த பத்து பேருக்கு கை கால் போய் அவர்கள் எதிர்காலம் பாதிக்கபட்டு இருக்கும்.. இது போல தமிழகத்தில் விபத்தின் மூலம் எதிர்காலத்தை இழந்தவர்கள் ஏராளம்…. பத்தரிக்கைகளும் தொடர்ந்து சாலை விழிப்புனர்வு குறித்து தொடர்ந்து எழுதுங்கள்

டிவி தொடர்ந்து விளம்பரம் மூலம் நீங்கள் தயாரித்த மொக்கைபடங்களை தினமும் விளம்பரபடுத்தி மெஸ்மெரிசம் செய்து தியேட்டருக்கு மக்களை பார்க்க அழைப்பது பொல.. தொடர்ந்து விபத்து விழிப்புனர்வு விளக்கபடங்கள் ஒளிபரப்புங்கள்…

எத்தனை குறும்பட இயக்குனர்கள் களத்தில் குதிக்கின்றார்கள் என்று???

பொது சேவை விளம்பரங்கள் எடுக்க எங்களால் முடியாது என்கின்றீர்களா?? நல்ல பொதுத்துறை விளம்பரங்கள் இயக்கி கொடுத்தால் அது நிச்சயம் நன்றாக இருந்தால் தினமும் ஒளிபரப்புவோம்…விளம்பரங்கள் ஒரு நிமிடத்தில் இருக்க வேண்டும் என்று உங்கள் தொலைகாட்சியில் விளம்பரப்படுத்தி பாருங்கள்.. இது போலான விஷயங்கள் எல்லாம் செய்து விட்டு ஹெல்மெட் போட்டு வாகனம் ஒட்டுங்கள என்று சொல்லுங்கள்.. அதை விடுத்து விட்டு சாலைபாதுகாப்பு வாரம் என்றாலேஹெல்மெட் போடுங்கள் என்று சொன்னால் ஹெல்மெட் போட்டு வாகனம் ஓட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..

ஆனால் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்களுக்கு ஹெல்மெட் மட்டுமே தீர்வு அல்ல…என்பதே என் கருத்து…எத்தனை குடும்பத்தில் சாலையை எப்படி கடக்க வேண்டும்.. வாகன்த்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து இருக்கின்றார்கள்.. பள்ளியில் இதை பற்றி சொல்லிக்கொடுக்கின்றார்களா? அதுவும் இல்லை… எல்லாத்திலேயும் ஒரு அலட்சியம்…. அப்புறம் இது போல விபத்துகள் ஏன் நடக்காது..???வெகுநாட்களுக்கு முன் டிவியில் ரயில்வே லெவல் கிராசிங் விபத்துகளுக்கு கார்ட்டூன் மூலம் ஒளிபரப்பிய விளம்பரம் மக்களிடம் நல்ல ரீச்…

நிறைய பேட்ரோல் வாகனத்தை அதிகபடுத்துங்கள் தேவையில்லாமல் சாலையில் வாகனத்தை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுங்கள்…பழுதாகி நிற்கும் வாகனம் என்றால் 20மீட்டருக்கு முன் அறிவிப்பு செய்யும் முக்கோண ரிப்ளெக்டரை ரோட்டில் வைக்க சொல்லுங்கள்….ஓய்வில்லாமல் வாகனம் ஓட்டவைக்கும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுங்கள்….

தினமும் விளம்பரத்தின் மூலம் பல கோடிகளை கல்லாகட்டுகின்றீர்கள்.. உங்கள் உழைப்பு அதனால் விளையும் நன்மை உண்மைதான்.. உங்கள் இஷ்ட்டம்தான்… ஆனால்ஒரு நாளில் ஒரு நிமிடம் ஒரு நிமிடமாக ,பத்து நிமிடங்கள் நாம் வாழும் சமுக அமைப்புக்கு பயண்பெறும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதால் உங்கள் பேங்க் பேலன்சுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது

ப்ளிஸ்….யாராவது புதிதாக கார் வாங்கி அவர்கள் கார் பழுதாகி நின்றால் அதை அறிவிக்க முக்கோண ரிப்ளெக்டர்களை தமிழகத்தில் பயண்படுத்தி வருகின்றார்கள்.. ஆனால் எந்த லாரியோ, பேருந்தோ பழுதாகி நின்றால் வேப்பமரத்து கிளையும், நெய்வேலி காட்டாமணி செடிகள் மட்டுமே வாகனம் பழுதாகி நிற்க்கின்றன என்றுஅறிவிக்க வைக்க காரணம் என்ன??

லாரிகள் சரக்குகள் எடுத்து சென்று நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொடுக்க இரவு பகல் பாராது பணியாற்றுகின்றன.. அதை மறுக்க முடியாது… ஆனால் சாலையில் லாரியை அப்படியே நிறுத்திவிட்டு ரோட்டில் ஒதுங்கும் நிறைய வண்டிகளை நான் காட்டுவேன்…பல அனுபவம் வாய்ந்த லாரி டிரைவர்கள்… நன்றாக ரோட்டு ஒரத்தில் லாரியை நிறுத்திவிட்டு செல்வதை நான் பார்த்து இருக்கின்றேன்.. அதே போல கார்களும்தான்… ஆனால் ஒருசில டிரைவர்களின் அலட்சியம் பலரது கனவுகளை சிதைக்கின்றது..ஆனால் ரோட்டில் வாகனம் நிறுத்தும் லாரிகள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை…

You might also like

Leave A Reply

Your email address will not be published.