ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட சதி..அரசியல் சூழ்ச்சியா…?

0 1,179

சந்தேக குண்டு!

44 சிஆர்பிஎப் வீரர்களின் படுகொலையை எவ்வித விவாதங்கள் இன்றி எத்தகைய சந்தேகத்தையும் கேட்காமல் தேசபக்தி என்கிற பெயரில் மழுங்கடிக்க நினைப்பது பெரிய அயோக்கியத்தனம்.

ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களை விட முற்றிலும் மாறுபட்ட சூழல் கொண்டது.

எல்லையை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலைகளில் தடுக்கி விழுந்தால் செக்போஸ்ட்கள் அமைந்திருக்கும்.

350 கிலோ வெடிமருந்துகள் என்பது ஏதோ ஒரு சிறிய துப்பாக்கி தோட்டா இல்லை. ஒரு சதிதிட்டத்திற்கு நாசவேலைக்கு அவ்வளவு பெரிய வெடிமருந்து கொள்முதலில் தொடங்கி காரில் பொறுத்தி திட்டமிட்டு ராணுவ வண்டிகளை நோட்டமிட்டு தாக்குவது மெரினாவில் பலூன்களை சுடுவது போன்ற எளிதான வேலை அல்ல.

24 மணிநேரமும் தீவிர ரோந்து கண்காணிப்பு, தீவிரவாதிகளின் ரேடார் ஒயர்லெஸ் போன்ற தகவல் தொடர்புகளை வழிமறித்து கேட்கும் நுண்ணறிவு பிரிவு, இவையெல்லாம் தூங்கி கொண்டிருந்தது என்பதை ஜெய் ஹிந்த் போட்டு திசை திருப்புகிறார்கள் என்றால் சதி என்பது எங்கே தொடங்கிருக்கிறது என்று யோசிப்பது தவறில்லையே.!

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட சதி..அரசியல் சூழ்ச்சியா…?

வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டது. சுமார் ஒரு வார காலமாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்து நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்ட பின்னரே, நேற்று வீரர்கள் பயணத்தைத் தொடங்கினர். அந்த நெடுஞ்சாலையில் இப்படி ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது. இந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அனைத்தையும் தாண்டி நூற்றுக்கணக்கான கிலோ வெடிப் பொருள்களைக் கொண்டுவர முடியாது. பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது. இல்லையேல், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. இது தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்படும்

சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா

20 கிலோ காய்கரி மூட்டை,அரிசி மூட்டை போன்ற வாகனங்கள் எல்லாம் துருவி துருவி விசாரித்து சோதனைகள் செய்து அனுப்பும் போது
அதென்னப்பா
பல நூறு கிலோ சக்திவாழ்ந்த வெடிகுண்டு
அதுவும் கஸ்மீர் சல்லடையாக தேடும் இடங்களில் நுலைந்தது & வெடித்தது
அனைத்து நவீன கருவிகள் பார்டரில்தானே உள்ளது !.

தாக்குதல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீரில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.