ஊரின் ஏரிக்கரையோரம், ஒதுக்குப்புறமாய் உள்ளது. உழவாரம் மேற்கொண்டால் இக்கோவிலை மேலும் சில காலம் காப்பாற்றலாம்.

0 342

ஒல்லையூர் கூற்றம்:

புதுக்கோட்டை காரையூர் அருகேயுள்ள ஊர் இன்றைய ஒலியமங்கலம். சங்ககால இலக்கியம் காலம் முதலே குறிக்கப்படும் பெருமை வாய்ந்த ஊர்.
புறநூற்றின் 71 ம் பாடலில் இவ்வூரினை குறித்த குறிப்பு வருகிறது! இதில் “ஒல்லையூர் தந்த பூதபாண்டியன்” எனும் பாண்டியனின் சிறப்பை கூறுகிறது.
மேலும் அகம், புறம் இரண்டு இலக்கியங்களும் இவ்வூரில் வாழ்ந்த பெருமக்கள் சிலரை கூறுகிறது.
ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன், இருங்கோள் ஒல்லையான் செங்கண்ணார் முதலியோர் இவ்வூரைச் சேர்ந்த மக்களே! இன்று மிகவும் சிற்றூராய் விளங்குகிறது.
புதுக்கோட்டையிலுள்ள நிறைய கோவில்களில் சோழர், பாண்டியர் கல்வெட்டுகளில் ஒல்லையூர் கூற்றம் என்றே வழங்குகிறது.

ஒலியமங்கலம் வரகுணேஸ்வரர்:
மொத்தம் இங்கு 9 கல்வெட்டுகள் உள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் கால கற்றளி இது. இவ்வூர் கல்வெட்டில் ஒல்லையூர் கூற்றத்து, ஒல்லையூர் மங்கலத்து இறைவன் வரகுணேஷீவரர் என அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் தானம், கொடுத்த கல்வெட்டும், இறைவன் திருமேனிக்கு செய்யும் பூஜைக்கு விட்ட நிவந்தமான ஊர், அதன் அளவீடுகளே காணப்படுகிறது!

குலசேகரபாண்டியனின் கல்வெட்டுகள் 4 காணப்படுகிறது. ஒல்லையூர் மங்கலம் என்ற சங்ககால ஊரே இன்று மருவி ஒலியமங்கலம் என அழைக்கப்படுகிறது. ஊரின் ஏரிக்கரையோரம், ஒதுக்குப்புறமாய் இக்கோவில் உள்ளது. உழவாரம் மேற்கொண்டால் இக்கோவிலை மேலும் சில காலம் காப்பாற்றலாம்.

Content Credit : யாஊயாகே

You might also like

Leave A Reply

Your email address will not be published.