மணப்பாறை முறுக்கின் வரலாறு இதுதான்..!1930-ல் இரெயில்வே காண்டிராக்டர்..!

0 868

மணப்பாறை முறுக்கின் வரலாறு ….. தெரிந்து கொள்வோமே நண்பர்களே ….ஒரிஜினல் சுவையுடன் கூடிய “மணப்பாறை முறுக்கு” இப்போது மணப்பாறையிலே கிடைப்பதில்லை தெரியுமோ!?

அந்த புகழ்பெற்ற மணப்பாறை முறுக்கின் சரித்திரப் பின்னணியை சற்றே பிரட்டிப் பார்ப்போம்!

Manapparai Railway Stationமணப்பாறை முறுக்கின் பிறப்பிடம் திருச்சி – திண்டுக்கல் தடத்தில் இருக்கும் மணப்பாறை இரெயில்வே நிலைய கேண்டீன்தான்!

சுமார் 1930-ல் இரெயில்வே காண்டிராக்டர் கிருஷ்ண அய்யர் மற்றும் மணி அய்யர் அவர்களால் அறிமுகப்படுத்தபட்டது இந்த ‘முறுக்கு’. அதன் சிறப்பான சுவையின் ரகசியம், மணி அய்யருடைய கண்டுபிடிப்பான இருமுறை பொறித்தெடுக்கும் முறைதான் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்!

அப்போதுதான் அத்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியிருந்த காலம். எல்லா டிரெயின்களுமே நீராவி எஞ்சின்களால் இழுக்கப்பட்டன. அந்த தடத்தில் செல்லும் எஞ்சின்களுக்கு மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன் தான் நீர் நிரப்பும் இடம் (Watering station). அதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்புத் தண்ணீர் வளைவு குழாயை மணப்பாறை ரயில்வே ஸ்டேஷனில் காண முடிந்தது (இப்போது உள்ளதா என்று தெரியாது).

இஞ்சினுடைய “டெண்டரி”ல் தண்ணீர் நிரப்ப சுமார் அரை மணிநேரம் பிடிக்கும். அந்த நேரத்தில் முறுக்கு பிசினஸ் சுறுசுறுப்பாக நடக்குமாம்!

பிற்காலத்தில் டீசல் எஞ்சின் வந்தபிறகு பயணிகள் அந்த சுவையான முறுக்கை வாங்கிச் செல்ல ஏதுவாக மணப்பாறை வழியாகச் செல்லும் எல்லா புகைவண்டிகளுமே குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாக வந்து நின்றனவாம்!

மணப்பாறையில் விளையும் பச்சரிசி ஒரு தனிச்சுவையை ஊட்டுகிறது. மேலும் தேங்காய் எண்ணையில் பொறிக்கப்பட்டதும் இதன் சுவையை இரட்டிப்பாக்கியது என்று வரலாறு கூறுகிறது. மேலும் அந்த ஊரில் கிடைக்கும் உப்பு நீரும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

ஆனால் அந்தவகை முறுக்கின் ஆதிகர்த்தாவாகிய மணி ஐயரின் குடும்பம் தற்போது அங்கு இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.