வழக்கமாக பெட்ரோல் நிரப்பும் பங்கிற்கு சென்றேன் ஆனால் அன்று வழக்கத்திற்கு மாறாக அன்று நடந்தது..!

0 2,750

என்ன தான் சுயநலம் என்னில் சூழ்ந்துகிடந்தாளும் சற்று சமூகத்தின் மீது அக்கறை கொண்டவனகவே வளர ஆசைப்பட்டவன் அதன் படி வாழவும் முயற்சி செய்கின்றவன்…!

பொதுவாக பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பவர்கள் படித்து முடித்தவர்கள் கிடையாது… ஏதோ ஒரு சூழலில் படிப்பை பாதியில் விட்டவர்களும், குடும்ப வறுமையின் காரணமாக சிறுவயதிலயே இதுபோன்று வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம்..!

இந்த அவலநிலைக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம் தமிழக அரசு இயக்கும் மதுபானகடைகளே முதல் காரணம்..!

கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றேன்..! அங்கு பணியாற்றிய அந்த சிறுமி அதாவது வயது 19 இருக்கும்..! தயக்கத்தோடே அண்ணா என்று அழைக்க நானும் எதற்தமாக என்ன என்று கேட்க பசிக்குதுன்னா சாப்புட போகலான்னு பாத்தா பங்க் ல வேற யாரும் இல்லை என்னால அதனால சாப்புட போகமுடியல நீங்க போய் ஒரு குஷ்கா வாங்கிட்டு வாரீங்களா என்றதும் என் மனம் சற்று தயங்கியது நம்மதான் காசு போட்டு வாங்கி தரனுமோ என்று..!

ஆனால் என்னிடம் அப்போது இருந்த பணத்திற்கு 300 குஸ்கா கூட வாங்கலாம் இருந்தும் அந்த பெண் கேட்ட ஒரு குஸ்காவில் நான் இல்லாதவன் போலே காட்டிக்கொள்ள தோன்றியது இவை அனைத்தும் 30 விநாடிகளில் தோன்றிய சிந்தனை..!

வாங்கி வருகிறேன் என்று புறப்படும் போது அந்த பெண்ணும் குஸ்காவிற்கான பணத்தையும் என்னிடம் கொடுக்கிறாள்..! நானும் வாங்கி செல்கிறேன்… ஆனால். கடையில் நான் குஸ்கா வாங்கவில்லை ஒரு சாப்பாடு கட்டுங்க என்று ஒரு சாப்பாட்டை கட்டி கொண்டு வந்து கொடுத்து திரும்பிவிட்டேன்.

மீண்டும் அந்த பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றேன் 100ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப சொல்லி நான் 100 ரூபாய் கொடுக்கும் போது அங்கு 130 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியிருந்தால் அந்த பெண்ணும் என்னிடம் கூறவில்லை நானும் ஒரு கணம் மேலே மீட்டர் போர்டில் தொகையை பார்க்கவில்லை என்றால் உதவிசெய்த ஆணவம் அந்த பெண்ணை காணும் போதெல்லாம் தோன்றியிருக்கலாம்..!

இந்த பதிவு எதுக்காக அப்புடின்னா

*)எந்த ஒரு தொழிலாளர்களையும் முதலில் சகமனிதனாக. மதிக்க பழகுங்கள் அவர்களுக்கும் வயிறு உண்டு..!

*)உதவியை நாடுபவர்கள் அனைவருமே இல்லாதவர்கள் இல்லை சூழ்நிலை கூட காரணமாக இருக்கலாம் நம்மிடம் உதவி கேட்க..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.