கழிவறையில் வராத பிராமின்யம் கருவறையில் ஏன் வருகிறது…? முழுவதும் படிக்காமல் முந்தி கொண்டு கருத்து கூற வேண்டாம்..!

0 618

நார்த்தாமலையில் மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண்மலை, பொன் மலை உள்ளிட்ட மலைகள் உள்ளன. இங்கு மேலமலைப் பகுதியில் இருக்கும் சுமார் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்கு அருகே ஒரு சுனை உள்ளது.

இந்தச் சுனை நீரில் ஒரு லிங்கம் இருப்பதும், இதை 1871-ல் மன்னராட்சியின்போது மக்கள் வழிபட்டதும் சுனைப் பகுதியில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையறிந்த, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் அமைப்பினர், மற்றும் பலர் தொல்லியில் துறையினரின் அனுமதியுடன் இந்தச் சுனையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்கான பணியை கடந்த டிச.31-ம் தேதி தொடங்கினர்.

தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டால் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிவலிங்கத்தை தரிசிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்ணீரை உடனடியாக முழுமையாக வெளியேற்ற முடியவில்லை.

இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த, அமைப்பைச் சேர்ந்த பார்த்திபன், முருகன், எடிசன் ஆகியோர் தலைமையிலான தன்னார்வலர்கள் குழு தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டனர். இதற்கு உள்ளூர் மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இதையடுத்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டு, சேறும் சகதியும் அகற்றப்பட்டு குடவறை சிவலிங்கத்துக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தஏராளமான பக்தர்களும், வெளிநாட்டினரும் கலந்துகொண்டனர். இதேபோன்று சித்தன்னவாசலிலும் சுனையில் லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஏற்கெனவே வழிபடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது:‘தலவீரிசிங்கம்’ என்று அழைக்கப்பட்ட இந்தச் சுனையில் தொல்லியல் துறையினரின் அனுமதியுடன் மோட்டார் உதவியுடன் சுமார் 20 அடி ஆழ சுனையில் தேங்கியுள்ள தண்ணீர் இறைக்கப்பட்டது. அதில் பாதிக்கும் மேல் சேறும் சகதியுமாக இருந்ததால் அதை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டதையடுத்து, லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

148 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வழிபாட்டில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். வெளிநாட்டினர் சிலரும் வந்து லிங்கத்தைப் பார்வையிட்டனர் என்றனர்.

ஆனால் தற்போது அங்கு பிராமினர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என்று எழுதி வைத்துள்ளனர்

அந்த கோவிலில் கழிவு கிடந்த போது சுத்தம் செய்யாத பிரமினன் தற்போது சொந்தம் கொணடாடுவது சரியில்லை என்று பல இளைஞர்கள் கொந்தளிப்பின் காரணமாக பிராமணர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என்ற வாசகம் அழிக்க பட்டது..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.