பால் ஊத்த போனவனுக்கு பால் ஊத்திட்டாங்க..! நடிகர்களின் தொண்டர்கள் ஓரமாக செல்லவும்..!

0 748

பால் ஊத்த போனவனுக்கு பால் ஊத்திட்டாங்க..!

உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அவலம் 2000 கோடி பொருட்செலவில் உருவாக்கி 10000 கோடியை வசூலிக்கின்ற அவதார் போன்ற படங்களுக்கே மேலை நாடுகளில் இந்த நிலைஇல்லை

ஜப்பானில் 20 வயதை கடந்த ஒருவன் ஏதாவது ஒரு உற்பத்தி துறையில் தொழில் தொடங்கி வெற்றி பெறனும் அது தான் அவனுக்கு அங்கே சமூக அடையாளம்.

அமெரிக்காவில் 20 வயதை கடந்த ஒருவன் தன் தொழில் வளர்ச்சி குறித்தும் தன் வாழ்க்கை தர மேம்பாடு குறித்தும்தான் சிந்திக்கிறான் செயல்படுகிறான்.

ஆனால் நம்மூரில் மட்டும் தான் சினிமா என்கிற போதைக்கு அடிமையாகி திரையில் தோன்றியவனை எல்லாம் கடவுளாக்கி பாலாபிசேகமும், பீர் அபிசேகமும், செய்து கிடா வெட்டி வழிபடும் கேடுகெட்ட நிலை உருவாகியுள்ளது.

நம் பாட்டன் காலம், நம் அப்பன் காலம், அவர்கள் சினிமாவை பார்த்ததே இல்லை, சினிமா என்கிற ஊடகம் முதன் முதலாக கண்டுபிடிக்கப்படுகிறது, திரையில் தோன்றும் மனிதனை ஆச்சர்யமாகவும், ஆதர்சமாகவும் பார்த்தனர் அன்று அவர்களுக்கு நவீன அறிவியலின் வளர்ச்சி புரிந்திருக்கவில்லை. அவர்கள் எம்ஜியாருக்கும், சிவாஜிக்கும் கட்அவுட் வைத்தும், தோரணம் கட்டியும் அறியாமையில் திளைத்தார்கள்.

ஆனால் இன்றோ அறிவியலின் வளர்ச்சியை நன்கறிந்த தலைமுறை வாழும் இக்காலுத்திலும் படித்த இளைஞர்கள்..

நம் பெற்றோர்கள் எந்த கல்வி கிடைக்காமல் ஏங்கினார்களோ அந்த கல்வியை பயின்ற இளைஞர்கள்,

இந்தத் தலைமுறைக்கு எப்படியேனும் கல்வி கிடைத்து விடவேண்டும் என்று காமராஜர் யாருக்காக போராடினாரோ அந்த இளைஞர்கள்,

திரையில் தோன்றுபவனை கடவுள் போல கொண்டாடும் காட்டுமிராண்டிகளாக மாறி நிற்பது எவ்வளவு பெரிய பேராபத்து.

உனக்கும் எனக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதில் எத்தனை பேரின் கனவும், தியாகமும் காலச்சுவடில் பதிந்துள்ளது என்று நீயும் நானும் சிந்திக்காமல் போனால் நாயினும் கீழான வாழ்க்கையை நீயும் நானும் வாழ்கிறோம் என்றே பொருள் ஏனென்றால் நாய்கள் பெற்றவற்றை மறப்பதில்லை.

நம்ம ஊருக்கு பள்ளிக்கூடம் கொண்டு வரணும் நம்ம புள்ளைங்க படிக்கணும் என்று பெரும் கனவோடு தன் சொந்த நிலத்தையும் அரசுக்கு எழுதிக்கொடுத்தவர்கள் ஏராளம் கடந்த நூற்றாண்டில் ஒவ்வொரு கிராமத்திலும் அப்படி ஒரு மனிதர் தியாகம் செய்திருக்கிறார். அவர் நம்மிடமே டிக்கட் போட்டு கோடிக் கணக்கில் பணம் வசூலித்து சமூக சேவை செய்கிறேன் என்கிற பெயரில் பாசாங்க செய்தவர்கள் அல்ல தன் சொந்த உழைப்பையே நமக்கு கொடுத்தவர்கள்.

அவர்களையெல்லாம் கொண்டாட இங்கே யாருக்கும் நேரமில்லை ஆனால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு நல்லது செய்வது போல திரையில் நடித்தால் போதும், இந்த மக்களிடம் சுரண்டிய கோடிக்கணக்கான பணத்தில் சில லட்சங்களை சமூக சேவை என்கிற பெயரில் வீசி எறிந்தால் போதும் அவன் நமக்கு தலைவன்.
இந்த நடிகன் அந்த கருணையையும் வியாபாரமாக்கத் தெரிந்தவன் சில லட்சங்களை வீசி எரிந்ததையே விளம்பரமாகக் கொண்டு தன் அடுத்த படத்தின் டிக்கட் விற்பனையை உயர்த்திக் கொள்வான்.

இந்த நடிகர்களை கொண்டாடுபவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் திரையில் பார்க்கும் அவர்களின் தோற்றத்தில், பாவனைகளில் குணங்களில் எதுவுமே துளியளவும் உண்மையில்லை திரையில் ஒரு நடிகர் சிரிக்கிறார் அது அழகாக இருக்கிறது என்றால் சத்தியமாக அது அவரின் இயல்பான சிரிப்பே அல்ல ஒரு முறைக்கு 1000 முறை கண்ணாடி முன்பு சிரித்து பார்த்து அதற்கென்று நிபுணர்களை அணுகி சிரிக்கும்போது மேல் உதடு கொஞ்சம் சின்னதா தெரியும், கீழ் உதடு கொஞ்சம் கூர்மையாக இருக்கணும் என்று டிசைன் செய்து அதற்கேற்றார் போல அறுவை சிகிச்சை செய்து உருவாக்கப்படுவதுதான் அவர்களின் அந்தக் சிரிப்பு, ரஜினி, கமல், விஜய், அஜீத் இன்னும் பல முன்னணி நடிகர்கள் என்று பாரபட்சமே இல்லாமல் எல்லோரும் இப்படித்தான்.

இவனுங்க உடம்புல தலைமுடி, பற்கள், மூக்கு, மீசை, தாடி என்று எது உண்மை, எது போலி என்பது அவனுக்கும், அவனக்கு அந்த ஆப்ரேசன் செய்தவனுக்கும் மட்டும் தன் வெளிச்சம்.

இது புரியாம அவன் ஏதோஆபத்பாண்டவன் போலவும், மேலோகத்தில் இருந்து குதித்தவன் போலவும் வெறிப் பிடித்து போய் காட்டு வாசிகள் போல திரையரங்கில் கத்துறது எவ்வளவு பெரிய காட்டுமிராண்டித் தனம்.

திரையில சாகசம் பல செய்யுற இவனுங்கல கூட்டிட்டு வந்து ஒரு நுனிக் கரும்பை மக்கள் முன்னாடி கடிச்சி காட்ட சொல்லுங்க! முடியாது ஏன்? எல்லாம் செட்டிங்கு… ஒரு பல்லு வாயில இருக்காது.

நான் சிறுவயதில் செய்தித்தாளில் பார்த்தது இப்பவும் ஞாபகம் இருக்கு ரஜினி படம் பார்க்க காசு இல்லாமல் மனைவி தாலியை விற்ற கணவன், மனைவி பிறந்த வீட்டிற்கு ஓட்டம் என்று,

இப்போதும் செய்தி பார்க்கிறேன் அஜித்தின் படம் பார்க்க காசு கொடுக்காத தந்தையின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு..
என்னா ஒரு சமூக முன்னேற்றம்.

இது எதுவுமே புரியாம இவர்களை ஏதோ குழதெய்வம் போல கிடா வெட்டி, அபிஷேகம் பண்ணி கொண்டாடுறது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்னு என் நண்பர்கள், என் அண்ணன் மார்கள், தம்பிகள் புரிஞ்சிக்கணும்.

அப்படி எல்லாம் புரிஞ்சிக்க முடியாது நீ மூடிட்டு போடானு சொல்லிட்டு நீங்கள் இதே மன நிலையில் தான் வாழ்வேன் என்றால்!

நமக்கு கல்வி கொடுத்த கடந்த தலைமுறையும்,

நாம் நாசமாக்கப் போகும் அடுத்த தலைமுறையும்

நீ செத்தாலும் உன் பிணத்தின் மீது காரி உமிழும்.

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.