யானை அதனை தாக்கும் சிங்கம்,சிங்கத்தை தாக்கி யானையை காக்கும் மனிதன்..!

0 714

எந்த ஒரு செயலின் பின்னாலும் இந்த சிந்தனையை பொருத்தி பார்க்கலாம்.தொழிலாக இருக்கலாம்.ஒரு நீண்ட பயணமாக இருக்கலாம். திருமணமாக இருக்கலாம் வீடு கட்டுவதாக இருக்கலாம்..

எதை செய்வதானாலும் அதற்கான தெளிவான திட்டமிடலும் செயல் படுத்தும் திறனும் தான் அவற்றை செம்மையுறச்செய்யும்.
வீடென எடுத்துக்கொண்டால் இடம்,கட்டுமானப்பொருட்கள் என்பதை கடந்து வீட்டின் வடிவம் எப்படி இருக்க வேண்டும்.எந்த, எந்த அறை என்ன அளவில் எப்படி இருக்கவேண்டும் என்பது தான் முதன்மையானது.வீடு எப்படி கட்டப்படவேண்டும் என்பதை வரைகலையாக முதலில் தீர்மானிக்கிறோம்.இன்று கட்ட்ப்பட்ட வீடே எப்படி இருக்கும்.என்று உருவாக்கி பார்க்கும் அளவுக்கு கணினி தொழில் துறை வளர்ந்து விட்டது.

இன்றைய நிலையில் இவ்வாறெனில்,தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு சிற்பம் வடிக்கப்படவேண்டும் எனில் அதற்கு முன்பாக அது எப்படி வடிக்கப்பட வேண்டும் என ஒவியமோ ,வடிவம் குறித்த தீர்மானத்திற்கு வர உதவியான எதுவோ இருந்திருக்கவேண்டும்.
புராண கதைகளுக்கு பின்புலம் இருக்கும்.வடிவம் குறித்த விவரணை இருக்கும்.இது போன்ற சிற்பங்களுக்கான சிந்தனை எங்கிருந்து உருவாகியிருக்கும்.

யானை அதனை தாக்கும் சிங்கம்,சிங்கத்தை தாக்கி யானையை காக்கும் மனிதன் ,யானை துதிக்கையால் தூண் போன்ற ஒன்றை பிடித்து தனக்கு உதவும் மனிதனை தாங்கி பிடிக்கிறது.சிங்கத்தின் ஒரு கால் நகங்களுடன் இடது முழங்காலாலும் ,கேடயத்தாலும் தடுத்து ,தாக்க வரும் வலது காலை குறுவாளால் குத்துவது என்றெல்லாம் யோசிக்கவே திணறும் வடிவமைப்பு ஒற்றைக்கல்லில் பேளூரில் காட்சியாக கண் முன் நிற்கிறது.

விழிகளையும் ,மனதையும் அசையவிடாது நம்மை அசர அடிக்கும் சிற்ப கலைப்பெட்டகமான பேளூரில் அவ்வளவையும் கடந்து எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கும் இந்த சிற்பம் அதன் வடிவமைப்பினால் அதனை வடித்தவரையும் ,அதன் பின் உள்ள அந்த சிந்தனையின் செழுமையையும் தொள்ளாயிரம் ஆண்டுகள் கடந்தும் நம்க்குள் கடத்திக்கொண்டிருக்கிறது.

ஹொய்சாளர்கள் கலை – 12 ஆம் நூற்றாண்டு

#பேளுர் – கர்னாடகா

Hoysala Art -12th Century

Belur – Karnataka – India .

பதிவு: பரந்தாகன் தமிழ் செல்வம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.