கொஞ்சம் இத பத்தி தெரிஞ்சுக்கோங்க..! பிற நாடுகளுக்கு எதற்காக காந்தள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று..!

0 1,264

தமிழ்நாட்டில் வணிகரீதியாகப் பயிர் செய்ப்படும் மருந்துச் செடிகளில் கண்வலிக்கிழங்கு எனப்படும் காந்தள் மலர் மருந்துச் செடி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்து பதினைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் குறிப்பாக ஈரோடு, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் 500 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த மருந்துப் பயிரின் கிழங்குகள் உழவுக் கலப்பை போன்ற அமைப்பைப் பெற்று இருப்பதால் கலப்பைக் கிழங்கு என்றம் அழைக்கப்படுகிறது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இது ஒரு கொடி வகை மருந்துப் பயிர் ஆகும்.

வேலிகளில் படர்ந்து செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் பூக்கும். இதன் கிழற்குகள் ஒவ்வொன்றும் சுமார் 80 முதல் 100 கிராம் வரை இருக்கும். கோடைக்காலத்தில் கிழங்குகள் ஓய்வுத்தன்மை (Dormancy) பெற்று மழைக்காலத்தில் மட்டுமே கொடிகள் துளிர்த்து பூத்துக் காய்க்கின்றன.

காந்தள் மலர் செடிகள் வணிக ரீதியாக காணப்பட்டன. விதைகளுக்கு வெளிநாடுகளில் அதிக அளவுத் தேவை ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

பயன்கள்

கிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. இவை பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சியில் சடுதி மாற்றத்திற்காகப் பயன்படுகின்றன.

தவிர, வாதம், மூட்டுவலி, தொழு நோய், ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதை மற்றும் விஷக்கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.

விதைகளில் அதிக அளவு கோல்ச்சின் மருந்து காணப்படுவதால் விதகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது. விதைகளில் 0.20 சதவீதம் கோல்ச்சின் மருந்துப் பொருள் உள்ளது.

அண்மையில் விதையிலிருந்து ‘கோல்ச்சின்’ மூலப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான ்கோல்ச்சிகோஸைடு’ (Colchicoside) கண்டறியப்பட்டு வருகிறது.

செம்மண், பொறை மண் வகைகள் ஏற்றவை. மண்ணின் அமிலத்தன்மை 6.0 முதல் 0.7 ஆக இருத்தல்வேண்டும். வடிகால் வசதியுடைய மண் வகைகள் மிகவும் ஏற்றவை. கடினமான மண்வகைகள் சாகுபடிக்கு உகந்தவை இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.