பட்டா மாற்றுவது அவ்வளவு சிரமமா..? சற்று கவனமாய் இருங்கள்..!

0 4,567

தாலுகா அலுவகத்தில் பட்டா மாறுதல் எப்படி செய்யபடுகிறது ?
========================================
பட்டா மாறுதல்கள் B.S.O. படி, 31 Act படியும் சர்வே லான்ட் ரெகார்ட் மான்யூவல் II பாகத்தில் உள்ளவைகள் படி செய்யபடுகிறது.

1. பட்டாதாரர்கள் தாங்களாகவே விற்பது, வாங்குவது சம்மந்தமாக சப் ரெஜிஸ்திரார் மூலமாகவும், நேரிடையாகவும் மனு கொடுத்து மாறுதல் செய்யபடுகிறது.

2. வாரிசு மூலம் மாறுதல் செய்யலாம்.

3. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் ரெவின்யூ ஏலம் மூலமாகவும் நடவடிக்கை எடுத்து முடிவு செய்யலாம்.

விளக்கம் :
————–
I. பட்டாதாரர்கள் கிரையம் வாங்கியவர் பத்திரம் பதிவு மூலம் செய்து வட்டாட்சியர் அலுவகத்திற்கு மனு கொடுக்கும் பட்சத்தில் முன்புள்ள பட்டாதரர் என தெரிந்தால் உடனே பட்டா மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும்.

பட்டாதாரர் அவ்விதம் விற்றவர் இல்லை என்று தெரிந்தால் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவரிடம் ஒப்புதல் வாங்கி பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.

II வாரிசு படி பட்டா மாறுதல்கள் :
———————————————-
பதிவு செய்யப்பட்ட நில சுவான்தார் இறந்துவிட்டாலும்

7 வருடம் அதற்கு மேல் பதிவு செய்யப்பட்ட உரிமைதாரரின் இருப்பிடம் தெரியாமல் போனாலும்

12 வருடமும் அதற்கு மேலும் தன் கைவசம் நிலசுவான்தார் வைத்து கிஸ்தி அவரது பெயரில் வைத்து இருந்தாலும்

அ) பதிவு செய்யப்பட்ட பட்டாதாரர் இறந்து விடும் பட்சத்தில் எந்த விதமான ஆட்சேபனை இல்லாத பட்சத்திலும் வாரிசுதாரர்களுக்கு பட்டா வழங்கலாம்.

ஆ) ஆட்சேபனை இருந்தால் விசாரணை செய்து முடிவு செய்யலாம். சிவில் கோர்ட்டில் தாவா இருக்கிறது என்று தெரிந்தால் கோர்ட் நடவடிக்கை முடியும் வரை இறந்தவர் பெயரிலேயே பட்டா இருக்க வேண்டும்.

தாவா மூன்று மாதத்திற்குள் கோர்ட் நடவடிக்கை இல்லையெனில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.

1. 12 வருட காலம் பட்டாதாரர் இல்லாமல் நிலத்தை உழுதும், பயிரிட்டு வந்து, கிச்திகள் கட்டி வந்தால், அதற்கான ஆதாரம் ஆன ரசீதுகள் இருந்தாலும் சரி, முன்புள்ள பட்டாதாரருக்கு கொடுத்து ஆட்சேபனை இல்லை என தெரிந்தால் பட்டா மாற்றம் செய்யலாம்.

2. 7 வருடமும் அதற்கு மேல் பட்டாதாரர் இருக்கும் இடம் தெரியாத பட்சத்தில் அவரின் வாரிசுக்கு பட்டா வழங்கலாம். அப்படி வாரிசு யாரும் இல்லாத பட்சத்தில் அந்த சொத்தை தற்சமயம் வைத்துள்ள நபருக்கு பட்டா மாறுதல் செய்யப்படும் என மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்து, அதன் பின் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும். அப்படி அந்த இடம் உரிமையாளர் 3 மாதத்திற்குள் ஆட்சேபனை செய்து சிவில் கோர்ட்டில் தாவா செய்து அந்த தாவா நகலை வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கூட்டு பட்டாதாரர் விஷயத்தில், கூட்டு பட்டாதாரராக ஒருவர் முழு புலமும் அவருக்கு இல்லை என்று தெரிந்தால் அவரது பெயரை நீக்கி விட வேண்டும்.

சப் டிவிஷன் செய்யும் பொழுது கூட்டு பட்டாதாரர் சப்டிவிஷன் செய்ய மனு கொடுத்தால், அந்த நிலம், பத்திறபடி, வரப்பு (எல்லை) இருக்கும் பட்சத்தில் கூட்டு பட்டாதாரர் சம்மதம் வாங்காமல் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும்.

III. நீதிமன்ற தீர்ப்பு ரெவின்யூ ஏலம் :
================================
நீதிமன்ற தீர்ப்புடன், சொத்தை பெற்று கொண்டதற்கான சர்டிபிகேட்டுடன் மனு கொடுத்தால் தான் மனு மீது நடவடிக்கை எடுத்து பட்டா மாற்ற வேண்டும். possession க்கான சான்றிதழுக்கு பதிலாக முன்புள்ள பட்டாதாரிடம் சம்மதம் கேட்டு, அப்படி கையெழுத்துடன் மனு செய்யும் பட்சத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும். ரெவின்யூ ஏழாம் சர்டிபிகேட் இருந்தால் போதுமானது. அதனை வைத்து நடவடிக்கை எடுத்து, பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க பணம் கொடுத்தாலும் பட்டா வரும் ஏன்னா நாம தான் தமிழ்நாட்டில் இருக்கோமே…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.