குழந்தைகளுக்கு மொட்டை எப்போது அடிக்கவேண்டும்..?

0 1,369

பச்சிளம் குழந்தைகளின் உச்சந்தலையில் Anterior fontonelle எனப்படும் சிறு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கபால எலும்பு இருக்காது, தோல் மற்றும் ஒரு தசை மட்டுமே மூளையை மூடிக்கொண்டு இருக்கும்.

இந்த Anterior fontonelle முழுவதுமாக எலும்பாக மாறுவதற்கு குறைந்தது 12 மாதங்கள் ஆகும்.

குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கும் போது வலியினால் தலையை ஆட்டும், தவறுதலாக கத்தியினால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு Anterior fontonelle மூடாமல் இருப்பதால் இந்த பகுதியில் காயம் ஏற்பட்டால் மூளையில் வெட்டுபட வாய்ப்பு உள்ளது.

இதனால் மூளையில் இரத்தகசிவு, வலிப்பு போன்றவை ஏற்படலாம்.
எனவே குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதாக இருந்தால் ஒரு வயதிற்கு பிறகு அடிக்கலாம்.
மொட்டை அடிப்பது நன்மை என்றாலும் இதுபோன்ற சிலவற்றில் கவனமாக இருக்க வேண்டும்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.