யாராவது இந்த காளான் எப்படி முளைக்கும் அப்புடின்னு யோசிச்சி இருக்கிங்களா..?

0 1,399

காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர்.

பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காளான்கள் ஏழை மக்களின் உணவாக இருந்தது. தற்போது இவை குடிசைத் தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதிக காளான் வகைகள் நச்சுத் தன்மை, மன மாற்றம், நுண்ணுயிர் கொல்லியியல்பு, தீனுண்ம எதிர்ப்பு, அல்லது உயிரியல் கவர்ச்சி முதலான துணை வளர்ச்சிக் கூறுகளை உற்பத்தி செய்கின்றன. ஆயினும், குறைந்த எண்ணிக்கையான காளான்களே மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஏனையவை சகிக்கமுடியாத கடுமையான அறிகுறிகளை தரக்கூடியவை.

இந்த நச்சுத் தன்மை காளான்கள் பூஞ்சன இழையில் இருந்து வித்திகள் விருத்தியின் போது அவற்றை ஏனைய அங்கிகளால் உண்ணப்படுவதில் இருந்து பாதுகாக்கும் உத்தியாகவே நடைபெறுகின்றது.

காளான்களில் பச்சையம் இல்லாததால் ஒளிச்சேர்க்கை இல்லாமலே தங்களுக்கு வேண்டிய உணவைப் பெறக்கூடியனவாக உள்ளன.

எனவே, இவை ஊணவிற்குப் பிற உயிர்களைச் சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. அதனால் காளான் ஒட்டுண்ணியாகவும் சாருண்ணியாகவும் உள்ளது. மரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துக்களை உறிஞ்சி அவைகள் பட்டுப்போகவும், காய்கறிகள் முதலானவை அழுகிப் போகவும் காரணமாக உள்ளவை நச்சுக் காளான்கள் ஆகும்.

இவற்றை அழிக்க ” காளான் கொல்லி” என்ற வேதியற்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

காளான்களுக்கு மற்ற தாவரங்களைப் போல இலை, பூ, காய் என்று எதுவும் இல்லை. எனவே, விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகளின் வளர்ச்சி எவ்வளவு விரைவாக ஏற்படுகிறதோ அவ்வளவு விரைவாக இவை அழியவும் நேரிடுகிறது.

மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.
உணவுக்காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.
பென்சிலின் என்ற மருந்து செய்ய பெனிசிலியம் (Penicillium) எனப்படும் நுண்ணிய பூஞ்சைக்காளான் பயன்படுகின்றது.
மதுபானங்கள் செய்யப் பயன்படுகின்றன.
ரொட்டிகள் செய்யவும் காளான்கள் பயன்படுகின்றன.

நேத்து நம்ம வீட்டுல காளான் குழம்பு காளான் பொரியல், அதான் இந்த பதிவு..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.