மூங்கில் மரம் காய்த்ததை பார்த்துள்ளீர்களா..? உண்மையாகவே மூங்கில் காய்குமா..?

0 424

புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன.

இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும்.

மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும்.

48 ஆண்டுகளுக்கு ஒருமுறை , 60 ஆண்டுகள் கழித்து பூக்கும்.

மூங்கில் பூ பூத்தால் அந்த ஆண்டு விளைச்சல் சரியாக இருக்காது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது. உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை.

அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடிபெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும்வரை அங்கேயே குடும்பத்தைப் பெருக்கும். மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பலமடங்காகப் பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குப் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த ஆண்டு விவசாயம் வழக்கத்தைவிட அதிக சேதாரத்தைச் சந்திக்கும்.

இதுதான் மூங்கில் பூத்தால் ஆகாது என்ற வழக்கத்தைத் தந்திருக்கும் எனலாம்

மூங்கில் பூத்துவிட்டது என்றால் அதன் வாழ்நாள் முடிந்துவிட்டது என்பது பொருள்..!

பூ விட்டால் காய் காய்காதா என்றால் காய்க்கும் அந்த காயை தான் நாம் மூங்கில் அரிசி என்கிறோம்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.