கர்ப காலத்தில் மனைவிகளுக்கு கணவன் செய்ய வேண்டியது..? இவை தான்..!

0 6,129

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் உண்ணக்கூடாத உணவுகள் எவ்வளவோ இருக்க, அதே அளவிற்கு நீங்கள் உண்ண வேண்டிய சத்துள்ள உணவுகளும் மிக அதிகம்.

அதுவும் இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயமும் அல்ல. உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் நலன் கருதியும் நீங்கள் உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை என்னோடு சேர்ந்து படித்து நீங்களும் பயனடையலாமே!

கர்ப்பமாக இருக்கும் போது ஏன் சத்தான உணவை உண்ண வேண்டும்?

கர்ப்பிணி பெண்கள் தவறான உணவு முறையில் செல்லும்போது கர்ப்ப கால வயிற்றுப்போக்கு தொல்லை என்பது மிகவும் அதிகம் காணக்கூடும். இதனால் உடல் சோர்வுடன் கூடிய ஒருவித களைப்பு உங்களுக்கு உண்டாக, உங்கள் கருவிலிருக்கும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் போகிறது.

நீங்கள் ஆரோக்கியமான உணவை கர்ப்ப காலத்தில் உண்பதன் மூலம் அந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் தங்கி குழந்தையையும் வலுப்படுத்துகிறது.

கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் எவை?

1. இரும்புச்சத்து:

கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 22 mg இரும்புச்சத்து உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரும்புச்சத்து என்பது தாவரங்களை விட விலங்குகளில் அதிகம் காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டால் இதயத்தின் செயல்பாட்டில் கடின நிலை காணக்கூடும். எனவே, உங்களுக்கு 30 முதல் 50 சதவிகித இரத்த ஓட்டம் என்பது அதிகரித்து காணப்பட வேண்டும். இதற்கு இரும்புச்சத்து என்பது கர்ப்பிணிகளுக்கு அவசியமாகிறது.

2.வைட்டமின் B

உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு வைட்டமின் – பி எனப்படும் போலேட் அவசியமாகிறது. இந்த வைட்டமின் – பி அடங்கிய உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது குழந்தை பிறப்பில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் குறையக்கூடும்.

3. ஐயோடின்:

இந்த ஐயோடின் என்பது நமது உடலுக்கு குறைவாக தேவைப்பட்டாலும், தேவையை உணர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த ஊட்டச்சத்து தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு உதவ, உடலின் வெப்பநிலை, வளர்சிதை மாற்ற அளவு, இனப்பெருக்க செயல்பாடு, இரத்த செல்கள் உற்பத்தி, நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாடு ஆகியவற்றை இயக்குகிறது. இந்த தைராய்டு ஹார்மோன், கழுத்து பகுதியில் சுரக்கும்.

4. துத்தநாகம்:

நம் கருவிலிருக்கும் குழந்தைக்கு நமது குணங்களை கொடுப்பது மரபு (gene) தான். இந்த ஜீனின் செயல்பாடுக்கு துத்தநாகம் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஊட்டச்சத்தை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் செல் வளர்ச்சி என்பது விரைவில் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய துத்தநாகத்தின் அளவு என்பது ஒரு நாளைக்கு 11 mg ஆக இருக்கிறது.

5. வைட்டமின் – D:

உங்களுடைய எலும்பை வலுப்படுத்த வைட்டமின் – D உதவுகிறது. அத்துடன் உங்கள் குழந்தையின் வளர்ச்சியிலும் வைட்டமின் – D முக்கிய பங்கை வகிக்கிறது.

வைட்டமின் – D யில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பேட், உங்களுடைய எலும்பையும், பற்களையும் வலுப்படுத்த உதவுகிறது. நீங்கள் வைட்டமின் – D அடங்கிய உணவை குறைவாக உண்ணும்போது உங்கள் குழந்தையின் எலும்பு மிகவும் மென்மையாக இருக்கும். இதனால் லேசாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது.
வைட்டமின் D அடங்கிய உணவுகள்
6. வைட்டமின் – C:

உங்களுக்கும், உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான இரத்தத்தை வைட்டமின் – C தருகிறது. இந்த வைட்டமின் – C கொலெஜன் உற்பத்திக்கு பெரிதும் உதவ, இரத்த நாளங்களும் இதனால் வலுவடைகிறது.
வைட்டமின் C அடங்கிய உணவுகள்
7. கால்சியம்:

குழந்தைகளின் பற்கள் மற்றும் எலும்பு வலு பெறுவதற்கு கால்சியம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் 1000 mg (18 வயதுக்கு மேல் உள்ளவர்கள்) எடுத்துக்கொள்ள வேண்டும்.
கால்சியம் கொண்ட உணவுகள்
8. நார்ச்சத்து:

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் என்பது கர்ப்பிணிகளுக்கு காணப்படுகிறது. இந்த நார்ச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்தும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த உணவெல்லாம் நீங்கள் உண்ண வேண்டும்?

1. பால் சம்பந்தப்பட்ட பொருள்:

கர்ப்பிணி பெண்களுக்கு பாலால் உற்பத்தி செய்யப்படும் பொருள் தேவைப்படுகிறது. ஏனெனில், பாலில் இரண்டு வகையான உயர் தர புரதச்சத்து இருக்கிறது. அவை காசின் மற்றும் வேயே ஆகும். இந்த பால் சம்பந்தப்பட்ட உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் தேவையான புரதம் மற்றும் கால்சியம் என்பது கிடைக்கிறது.
இதனால் என்ன பயன்கள்?

– ப்ரீ-எக்லம்ப்சியா பிரச்சனையை தவிர்க்கும்.

– கர்ப்ப கால நீரிழிவு நோயை அண்டவிடாமல் தடுக்கும்.

– பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று பிரச்சனையை போக்கும்.

– அலெர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

2. பருப்பு வகைகள்:

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது பயறு, பட்டாணி, பீன்ஸ், தட்டைப்பயறு, சோயாபீன்ஸ் மற்றும் வேர்க்கடலை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பருப்பு வகைகளில் தாவர ஊட்டச்சத்தான கரையக்கூடிய நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து, போலேட் (B9), கால்சியம் ஆகியவை இருக்கிறது.
என்ன பயன்கள்?

– இதய நோயிலிருந்து உங்களை காக்கும்

– நீரிழிவு நோயிலிருந்து விடுதலை தரும்.

– புற்றுநோய் வராமல் தடுக்கும்.

– கர்ப்ப கால மலச்சிக்கலுக்கு தீர்வை தரும்.

3. சர்க்கரை வள்ளி கிழங்கு:

இந்த சர்க்கரை வள்ளி கிழங்கில் பீட்டா – கரோட்டின் காணப்படுவதால், உடலுக்கு தேவையான வைட்டமின் – A ஊட்டச்சத்தை இது தருகிறது. கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் – A என்பது 10 முதல் 40 சதவிகிதம் வரை இருக்கிறது. மேலும் சர்க்கரை வள்ளி கிழங்கில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை உங்களுக்கு தர செய்கிறது.
என்ன பயன்கள்?

– இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சரி செய்கிறது.

– செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வை தருகிறது

– உடலின் அசைவுகள் இயல்பு நிலையிலிருக்க பெரிதும் உதவுகிறது.

4. சால்மன் மீன்:

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான உணவுகளுள் ஒன்று சால்மன் மீன். இந்த மீனில் ஒமேகா – 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது. ஒமேகா – 3 கொழுப்பு அமிலமானது கடல் உணவுகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த கொழுப்பு அமிலத்தை DHA மற்றும் EPA என அழைப்பர். இந்த EPA + DHA ஒரு நாளைக்கு நாம் 1000 mg எடுத்துக்கொள்ள இதனால் இதயநோய்கள் நீங்கும். அதேபோல் கர்ப்பிணி பெண்கள் கடல் உணவை வாரந்தோறும் 2 முறை மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த கடல் உணவில் மெர்குரி அதிகம் காணப்படுகிறது. இது கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய ஒரு திரவம் ஆகும்.
என்ன பயன்கள்?

– கருவிலிருக்கும் குழந்தையின் மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகிறது.

– எலும்பு வலுவடைய உதவும்.

– எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

– இயற்கையாகவே சால்மன் மீனில் வைட்டமின் – D இருக்கிறது.

5. முட்டைகள்:

முட்டையை சாப்பிடுவதில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், முறையாக நீங்கள் வேகவைத்து உண்ணாத பட்சத்தில் இதுவே தேவையற்ற குமட்டல் மற்றும் பிரச்சனையை கர்ப்பிணி பெண்களுக்கு தருகிறது. அதுவே நீங்கள் முறையாக சாப்பிடும்போது எல்லாவித ஊட்டச்சத்துக்களும் முட்டை மூலமாக கொஞ்சம் கிடைக்கிறது. ஒரு பெரிய முட்டையில் 77 கலோரி உயர்தர புரதம் மற்றும் கொழுப்பு இருக்கிறது. அத்துடன் வைட்டமின் மற்றும் தாதுக்களும் சேர்ந்து உங்களுக்கு கிடைக்கிறது.
என்ன பயன்கள்?

– உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

– இதிலிருக்கும் புரதச்சத்து ஆரோக்கியத்தை தருகிறது.

– எலும்பு குழாய் குறைபாடு பிரச்சனையை போக்குகிறது.

– மூளை செயல்பாட்டை சிறப்பாக்க செய்கிறது

கர்ப்ப காலத்தில் உண்ணகூடாத உணவுகள் எவை?

1. மெர்குரி அதிகம் அடங்கிய மீன்

2. சரியாக வேக வைக்கப்படாத முட்டை

3. வேகவைக்காத இறைச்சி

4. காய்ச்சாத பால்

5. சுத்தமற்ற பழம் மற்றும் காய்கறிகள்

6. காஃபின்

7. மூலிகை தேநீர் (மருத்துவரின் பரிந்துரையற்றது)

8. பதப்படுத்தப்பட்ட உணவுகள்

9. மிருதுவான பாலாடைக்கட்டி

10. அலெர்ஜி தரும் உணவுகள்

காஃபின்

கர்ப்பிணிகளே! நீங்கள் உண்ணும் உணவில் சுவை இருக்கிறதா என்பதை பற்றி இந்த பத்து மாதங்களுக்கு கவலைப்படாதீர்கள். ஏனெனில், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு என்ன உணவு அவசியம் என்பதை தெரிந்து அவர்கள் கருவிலிருக்கும்போதே நீங்கள் சாப்பிடுவதன் மூலம், நாளை பிறக்க போகும் உங்கள் குழந்தை எந்த வித சத்துக்கள் குறைபாடற்று ஆரோக்கியத்துடன் பிறப்பார்கள். கருவிலிருக்கும் குழந்தைகள் இரவில் எப்போதும் விழித்துக்கொண்டு இருப்பார்கள். எனவே அதற்கு ஏற்ப இரவிலும் உணவை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான ஆதரவை தர முயலுங்கள்

இதனை பகிர்ந்து பிறருக்கும் தெரியப்படுத்தவும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.