எல்லா சீனா உற்பத்தி பொருளும் இந்தியாவில் விற்க அனுமதிக்கும் போது பட்டாசுக்கு மட்டும் ஏன் தடை தெரியுமா..?

0 317

சீன பட்டாசுகளில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கெமிக்கல்களான குளோரேட் , சிவப்பு லெட், காப்பர் ஆக்சைட் மற்றும் லித்தியம் உள்ளன.

இவை அதிக அளவு சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்

தீபாவளி என்றாலே சட்டென நினைவுக்கு வருவது பட்டாசுதான்.

அப்படி இருக்க, தரமற்ற போலி பட்டாசுகள் மற்றும் சீனப் பட்டாசுகள் குறித்து மக்கள் விழிப்போடு இருப்பது அவசியம்.

தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்களுக்கு இணையான இடத்தில் இருப்பவை பட்டாசுகள் ஆண்டுதோறும் தீபாவளியின் போது, ஒளியாலும், ஒலியாலும் இல்லந்தோறும் மகிழ்ச்சியை உண்டாக்கும் பட்டாசுகள் பண்டிகையின் ‌பிரிக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது.

இதனை பயன்படுத்தி சீனப் பட்டாசுகள் மற்றும் தரமற்ற போலி பட்டாசுகள் கலந்துவிடும் அச்சுறுத்தல் நீடிக்கிறது.

சீனப்பட்டாசுகள் மிகவும் ஆபத்தானவை என்று தெரிந்த‌ருந்தும், அவற்றை வருமானத்திற்காக சில பட்டாசு வியாபாரிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குற்றம்சாட்டுகிறார்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள்.

கடந்த ஆண்டுகளில் சீனப் பட்டாசுகளின் ஆதிக்கம் அதிகம் இருந்ததாகவும், அது படிப்படியாகக் குறைக்கப்பட்டு தற்போது சீனப்பட்டாசுகள் விற்பனை பெருமளவு குறைந்து விட்டதாகவும் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

எனினும் சீனப் பட்டாசுகள் விற்பனை குறித்து சோதனை மேற்கொள்ளவும், அரசு இடும் உத்தரவை பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் தீயணைப்புத்துறை தெரிவிக்கிறது.

சீனப் பட்டாசுகள் தற்போது புழக்கத்தில் இல்லை என்று சொல்லப்பட்டாலும், மக்களுக்கும், பட்டாசு வியாபாரிகளுக்கும் அதன் தீங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு, அவற்றை புறக்கணிக்க முன்வந்தால்தான் தரக்குறைவான போலி பட்டாசுகள் மற்றும் ஆபத்து நிறைந்த சீனப்பட்டாசுகளின் ஒழிப்பென்பதும் சாத்தியமாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.