திருமணமானவர்கள் குழந்தை பெறபோகின்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இது..!

0 4,325

பிரசவ லேகியம் செய்வது எப்படி? (Prasava Legiyam)

பிரசவ‌ லேகியம் என்பது பிரசவத்தால் உடல்பலவீனமான தாயின் உடல்நிலையை தேற்றி வலுவடைய கிட்டத்தட்ட 21 மருந்துகளின் கூட்டுச் சரக்கு.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படக் கூடிய‌ உடல் கோளாறுகளுக்கும் சளி ,காய்ச்சல் ,தோல் நோய்கள் வயிற்றுக் கோளாறுகள் போன்றவைகளுக்கு எல்லாம் இதுவே மருந்து.

Homemade Medicine for Normal Delivery

பிரசவத்திற்குப் பின்னால் கருப்பையில் உள்ளே தங்கியுள்ள‌ வெளிவராத‌ கழிவுகளை வெளிக்கொணரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கர்ப்பப்பை சுருங்குவதால், வயிரும் குறையும். தாய் பாலூட்டும் போது குழந்தைக்கும் மருந்தின் சாரம் சென்று உடல் ஆரோக்கியத்துடன் குழந்தை இருக்கும்.

இரும்பு போல் உறுதியான உடலை தரும் பிரசவ லேகியம்

தேவையான பொருட்கள்

சுக்கு – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

அதிமதுரம் – 20 கிராம்

சித்தரத்தை – 20 கிராம்

லவங்கம் – 20 கிராம்

கண்டத்திப்பிலி – 50 கிராம்

வால்மிளகு – 10 கிராம்

ஓமம் – 25 கிராம்

சீரகம் – 50 கிராம்

ஜாதிக்காய் – 3

கருப்பட்டி – 150 கிராம்

நெய் – 100 கிராம்

நல்லெண்ணெய் – 100 மில்லி

பெருங்காயம் – சுமார் 20 கிராம்

குறிப்பு: பிரசவ லேகியம் மருந்துகள் என்று கேட்டாலே நாட்டு மருந்து கடைகளில் கொடுப்பார்கள்.

பிரசவ லேகியம் செய்முறை

மேற்கண்டவற்றில், நல்லெண்ணெய், நெய், கருப்பட்டி, பெருங்காயம் ஆகியவற்றைத் தவிர்த்து, மற்றவற்றை, ஒரு வெறும் வாணலியில் வறுத்து, பெருங்காயத்தை சிறிதளவு எண்ணையில் பொரித்து, இதனுடன் சேர்த்து, மிக்சியில் நன்கு பொடி செய்துக் கொள்ளவும்.

பின்னர் இதை சலித்துவிட்டு, அந்தப் பொடியை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு எத்தனை கப் அரைத்த பொடி என்பதை அளந்து பார்க்கவும்.

How to make prasava podi?

கப்பின் அளவிற்க்கு கருப்பட்டி எடுத்துக் கொள்ளவும் .

இப்போது ஒரு கடாயில், சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை போட்டு, அது நன்கு கரைந்தவுடன் எடுத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

பின்னர் கருப்பட்டி பாகை கடாயில் ஊற்றி, கொதிக்க விடவும்.

இந்தப் பாகு கெட்டியாக ஆரம்பித்தவுடன், வறுத்து வைத்துள்ளப் பொடியைப் போட்டுக் கிளறவும்.

இதனுடன், நல்லெண்ணையை ஊற்றிக் கிளறவும் .

எல்லாம் சேர்ந்து சுருள வர ஆரம்பிக்கும் போது, நெய்யை முழுவதும் ஊற்றி, மேலும் சிறிது கிளறி, இளகிய பதத்திலேயே இறக்கி வைத்து விடவும்.

How to prepare prasava legiyam?

நேரம் செல்லச் செல்ல ஆறியதும் இறுகி விடும்.

இதை ஒரு சுத்தமான டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து சாப்பிட வேண்டும் .

பிரசவ லேகிய பயன்கள்
பிரசவித்த தாய்மார்கள் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமாகி, குழந்தைக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தினமும் இருவேளை எடுத்துக்கொள்ளலாம்.

அஜீர்ணம், வாயு சேர்தல், பித்தம், ருசியின்மை போன்றவை குறைந்து பிரசவம் ஆன பெண் நன்கு ஆரோக்கியமாக உணவு எடுக்க முடிவதோடு குழந்தைக்கு பாலும் நன்கு சுரக்கும். அதன் பிறகும் தேவை எனில் சாமான்கள் வாங்கி மருந்துப் பொடி தயாரித்துக்கொண்டு பயன்படுத்தலாம். குழந்தை பிறந்த பிறகு ஒருவருட காலம் வரை அந்த காலங்களில் எடுத்துள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.