சிகரெட்டில் விதை வைத்து புகை பிடித்து தூக்கியெறிந்தால் அதில் விதை முளைத்தது சாத்தியமா.?

0 329

100 சதவிதம் ஆர்கானிக் மற்றும் மக்கும் தன்மை உடைய சிகரெட் வடிகட்டிகளை தயாரிக்கின்றனர் வேத் மற்றும் சேத்தனா ராய்.

இதை கவனியுங்கள், ஒவ்வொரு வருடமும் 4.5 ட்ரில்லியனுக்கு மேலான சிகரெட் துண்டுகள் பூமியில் எறியப் படுகிறது. இப்படி எறியப்படும் இந்த சிகரெட் வடிகட்டிகள் மக்கும் தன்மை உடையது அல்ல; அதனால் பிளாஸ்டிக் கவர், பாட்டல் போலவே இதுவும் சுற்றுப்புறத்துக்கு மிகத் தீங்கான ஒன்று.

“கர்மா டிப்ஸ்” காகிதம்

புகைப்பிடித்த பின் சிகரெட் துண்டை தூக்கி எறிகின்றோம், அது பூமியில் உள்ள குப்பையில் ஒன்றாய் சேர்கிறது. அப்படி எறியப்படும் சிகரெட் துண்டை குப்பையில் போடாமல் சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காதபடி பயன் படுத்தலாம். அது எப்படி என்றால், சாதாரண சிகரெட் வடிகட்டி இல்லாமல் தனித்துவமான சிறப்பு விதைகளை பொருத்தி கையால் செய்த சிகரெட் வடிகட்டியை தயாரிக்கின்றனர் வேத் மற்றும் சேத்தனா ராய். புகை பிடித்த பின் சிகரெட் துண்டை தூக்கி எறிந்தால் அந்த இடத்திலே செடிகள் முளைக்கும். எனவே நீங்கள் பூமிக்கு குப்பை சேர்க்கவில்லை மாறாக மரம் வளர்ப்பீர்.

இதன் பெயர் “கர்மா டிப்ஸ்”, இது 100 சதவிதம் ஆர்கானிக், மக்கும் தன்மை உடையது மற்றும் இரசாயனமற்றது.

வேத் மற்றும் சேத்தனா ராய், நல்ல சாம்பாதியம் உடைய தங்கள் வேலையை உதறிவிட்டு, சமூக அக்கறையுடன் ’கர்மா டிப்ஸ்’ தயாரிக்க முன் வந்தனர். 20 வருடம் பெப்சி, 7 அப், சாம்சங் மொபைல், பானசோனிக் போன்ற பெரிய நிறுவனங்களுடன் பணி புரிந்த பின், இவை வேண்டாம், அர்த்தம் உள்ள ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணி தொடங்கப்பட்டதே இந்த “கர்மா டிப்ஸ்”.

வேத் மற்றும் சேத்தனா ராய்

இதை தொடங்கும் எண்ணம், வேத் தான் வேலை செய்த விளம்பர அமைப்புக்காக ஒரு பெரிய புகையிலை நிறுவனத்துடன் கலந்துரையாடும் போது தோன்றியது. கர்மா டிப்ஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ள பெங்களூரில் உள்ள வேத் மற்றும் சேத்தனா ராய்யை தொடர்பு கொண்டோம்.

காகிதமே முதல் எதிரி

கலந்துரையாடலின் பொது, சிகரெட் உள் இருக்கும் புகையிலையை விட, அதை சுற்றி இருக்கும் காகிதமே மிக கொடுமையானது என்னும் உண்மை எனக்கு புலப்பட்டது.

“சிகரெட் தயாரிக்க காகிதம் பல உற்பத்தி முறைகளை தாண்டி வருகிறது. தொடர்ந்து எரிய உற்பத்தியின் பொது 99 சதவீதம் இராசயன முறைகளை காகிதம் கடக்கிறது. புகையிலையை நாம் இழுத்து கொள்கிறோம் ஆனால் காகிதத்தை? காகிதம் எவ்வளவு மெதுவாக எரிகிறதோ அவ்வளவு அதிகமான சுகத்தை தருகிறது,” என்கிறார் வேத்

புகைபிடித்தல் ஆபத்தானது; ஆபத்தை குறைக்கும் முயற்சி

வேத் மேலும் பேசுகையில், “அதன் பின் சிகரெட் துண்டு பற்றிய எண்ணம் என்னுள் ஆழமாய் பதிந்து விட்டது, நான் என் வேலையை விட்டு நின்றேன். புகைபிடித்தல் ஆபத்தானது என்று எவ்வளவு விளம்பரம் எடுத்தாலும், தொடர்ந்து கண்டித்து வந்தாலும் சிகரெட் விற்பனை மட்டும் குறைவதே இல்லை, மாறாக அதிகமாகி கொண்டிருக்கிறது. விற்பனையை குறைக்க முடியவில்லை, குறைந்தபட்சம் இரசாயன காகிதத்தை பயன் படுத்தாமல் கையால் செய்ய பட்ட சுற்றுச் சூழலுக்கு ஏற்ற காகிதத்தை பயன் படுத்தலாம்,” என்கிறார்.

சிகரெட் துண்டில் இருந்து முளைத்தச் செடி

இருவரும் மும்பையில் இருந்து வெளியேறி பெங்களூரில் தங்கினர். அங்கு தங்கள் யோசனையை நடைமுறைப் படுத்த முயற்சி செய்தனர். தங்களால் முடிந்தவரை புகைபிடித்தலை பாதுகாப்பாக ஆக்க வேண்டும் என்றும் சுற்றுச் சூலை காக்க வேண்டும் என்றும் எண்ணினர்.

இந்த யோசனைக்கு பிறகு தோன்றியதே “கர்மா டிப்ஸ்”, கர்மா டிப்ஸ் என்பது ஆர்கானிக் காகிதத்தால் செய்யப்பட்ட சிகரெட் வடிகட்டிகள். இவை புகைபிடித்தலை பாதுகாப்பாக ஆக்கவில்லை என்றாலும் குறைந்தது சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாறு அமைந்திருக்கிறது. இந்த சிகரெட் துண்டுகள் ஓர் இரு நாட்களில் மக்கி விடுகிறது மேலும் அதில் இருந்து செடி துளிர் விடுகிறது. புகை பிடிப்பவர்கள் அவர்கள் அறியாமலே நாட்டுக்கு ஒரு நன்மையை செய்கின்றனர்.

“புகை பிடிப்பவர்கள் புகை பிடித்த பின் எங்கோ தூக்கி எறியாமல் காலி பூ தொட்டியிலோ அல்லது தங்கள் தோட்டத்திலோ போட்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.”

இந்த யோசனை பலரை ஈர்த்தது

“எங்கள் முதல் சோதனை 2016ல், முதலில் குரோசியா-விற்கு சோதனை முயற்சியாக 1500 வடிகட்டிக்கான காகிதத்தை அனுப்பி வைத்தோம். எங்களின் இந்த முயற்சி நல்ல வரவேற்பை கொடுத்தது மட்டுமல்லாமல் அடுத்து ஆர்டரும் கிடைத்தது. சில வாரங்களிலே 5500 வடிகட்டிகள் அனுப்பினோம்.”

சேத்தனா கூறுகையில்,

“தற்போது இங்கிலாந்து, வாஷிங்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறோம். இந்தியாவில் சோதனை முயற்சி நடந்து கொண்டு வருகிறது. மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. புகைபிடித்த பின் விதைகளை நட்டு அந்த புகைப்படத்தை எங்கள் முகநூலில் பகிர்கின்றனர். ”

நிறைய முயற்சிகள், வாய் வழி பாராட்டு, சமுக வலைதளங்களில் பகிருதல் போன்றவை விளம்பரம் இல்லாமல் எங்களை வளர வைத்துள்ளது, என்கிறார்.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரமளித்தல்

மேலும் அவர் பேசுகையில், “எங்கள் திறமையான மேற்பார்வையாளர்கள் முகலாய பேரரசர்களுக்காக பணியாற்றிய 16 ஆம் நூற்றாண்டு காகிதத் தயாரிப்பாளர்களின் வரிசையில் இருந்து வந்தவர்கள். மரக்கூழ் மற்றும் இரசாயனம் இல்லாமல் மரபுவழி முறைகளைப் பயன்படுத்தி அவை தயாரிக்கப்படுகின்றதா என்பதை நாம் உறுதி செய்கிறோம்”.

இவை எல்லாவற்றையும் தாண்டி இவர்கள் கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தை தத்து எடுத்துள்ளனர். அவர்கள் தொழிற்சாலையில் 20 பணியாளர்கள் உள்ளனர், அதில் பெரும்பாலானோர் பெண்களே. அவர்களுக்கு புதிய தொழில் முறையை கற்று கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் ஊக்கப்படுத்துகின்றனர்.

மற்றும் இந்த கர்மா டிப்ஸை வைத்து அனுப்பக் கூடிய பைகளையும் அங்குள்ள பெண்களே கையால் செய்கின்றனர். இதற்கும் ஆர்கானிக் பொருட்களையே பயன் படுத்துகின்றனர். எழுத பயன்படுத்தும் மைகளும் நச்சுப் பொருள் சேர்க்காமல் அங்கேயே தயாரிக்கப்படுகிறது. இது போன்ற சிறு முயற்சி பிற்காலத்தில் பெரும் பலனை உருவாக்கும்.

“வெறும் லாபத்தை மட்டும் பார்க்கக் கூடிய எந்த ஒரு வியாபாரமும் தீங்கே…” என்று முடிகிறார் வேத்.

ஆங்கில கட்டுரையாளர்: அருணிமா ராய்

இதை பற்றிய மேலும் தகவல்

You might also like

Leave A Reply

Your email address will not be published.