தீபாவளிக்கு நீங்கள் செய்ய வேண்டியவை என்ன..? இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்..?

0 299

தீபாவளி என்பது மதங்களை கடந்து இந்தியாவில் அனைவரும் கொண்டாடும் ஒரு பண்டிகை. ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை புது உடை, இனிப்புகள், பட்டாசுகள் என வாங்கி மகிழும் ஒரு பண்டிகை

இந்தியாவில் குறிப்பாக நம் தமிழகத்தில் இன்னும் எத்தனை எத்தனையோ குடும்பங்கள் இருக்க இடமின்றி உடுத்த உடையின்றி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர் இதை வெறுமனே அவர்களின் இயலாமை என்று கடந்து விட முடியாது, காரணம் ஒருவன் பணக்காரன் ஆகிறான் என்றால் அங்கு சிலர் ஏழைகள் உருவாக்க படுகிறார்கள்..!

உழைப்பு திருட்டு அதாவது அதிகார வர்க்கத்தின் முதல் கொள்ளையே இதுதான் உழைப்பவனுக்கு தகுந்த ஊதியம் கொடுப்பதில்லை,

இப்படி பேசிக்கொண்டே சென்றோம் என்றால் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்..!

பெரும்பாலும் தீபாவளிக்கு துணியெடுக்க கடைக்கு செல்லும் போது நண்பர்கள், குடும்பங்கள், உறவினர்களாக செல்வீர்கள், நீங்கள் எடுக்கும் துணிகளின் மொத்த மதிப்பில் ஒரு 5% பணத்தை ஒவ்வொருவரும் ஒதுக்கி எங்கோ ஒரு ஏழையின் முகத்தில் சிரிப்பை காண செய்வோம்..!

இது கட்டாயமல்ல முடிந்தவர்கள் கட்டாயம் செய்யுங்கள்..!

தனிநபராக இதை செய்தால் செலவாக தெரியும் இதையே சிலர் பலர் இணைந்து செய்தால் நிச்சயம் இது சுமையாக தெரியாது

இதை படிக்கும் அனைவரும் இதை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதை இங்கு நான் பதிவிடவில்லை, யாரோ ஒருவராவது முயற்சி செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.