90ஸ் கிட்ஸ் நம்பிய பொய்களை ரசித்த பலருக்கும் தெரியாத மறுபக்கம் இது..!

0 1,758

ஆமாங்க கிராமத்தில இருந்து நகரத்திற்கு படிக்க போகனும் அல்லது பல கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் போகணும்..! கிராமாம் என்றாலே ஏழை என்று முத்திரை குத்திய காலம் அது..!

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அன்றைய தினம் பேருந்து பயணத்திற்கு கொடுக்கும் ஒன்று அல்லது இரண்டு ரூபாயை மிட்டாயும் தீனியும் வாங்கி சாப்பிட்டு நடந்தே வீட்டிற்கு இருட்டிய பின்பு வந்த நாட்கள்..!

அன்றைய தினம் ஒரு மிட்டாய்க்கு பல கிமீ தூரம் நடக்க ஆசைப்பட்ட நடந்த நாங்கள் தான் இன்று பக்கத்து வீட்டிற்கு செல்ல கூட வாகனத்தை தேடுகிறோம்

இன்று உங்களுக்கு கிடைக்கின்ற ஸ்னாக்ஸ்கள் அன்று எங்களுக்கு இல்லை..! பள்ளி முடிந்து வரும் வழி மரங்களே எங்களுக்கான ஸ்னாக்ஸ், இலந்தைப்பழம்,சூரப்பழம், கலாக்காய், குருவிப்பழம், நாவல் பழம், இவையெல்லாம் தேடி ஓடி பொறுக்கி தின்ற சுகங்களும் சுவைகளும் இன்று பலநூறு கொடுத்து ஆப்பிளும் ஆரஞ்சும் வாங்கும் போது ஏனோ இல்லை…!

புத்தகம் கால்ல பட்டா படிப்பு வராதுன்னு சொல்லும் போது தெரியாம கால்ல பட்டபோது சாமிகிட்ட மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாமல வீடியகாலையில எழுந்து 3 நாளு அந்த புத்தகத்தை தொட்டு கும்புட்டதும் நாங்க தான்..!

வீட்டுல ருசியா சமச்சி கொடுத்தாலும் நண்பணுக்காக சத்துணவுக்கு பேரு கொடுத்து அடிச்சு புடிச்சு வரிசையில் நின்னு தினமும் மரத்தடியில சுட சுட தரையில் அமர்ந்து சாப்புட்டதும் நாங்க தான்…!

பள்ளிகூடத்துல கொடுத்த வெள்ளை சட்டையும் காக்கி டவுசரையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை..! காரணம் பட்டன் தேவையான இடத்தில் இருக்காது ஆனால் அங்கையும் ஊக்க குத்திட்டு கெத்தா பள்ளிக்கூடம் போனவனுங்க நாங்க தான்..! இன்று எந்த உடை அனிந்தாலும் அடுத்தவரின் உடையோடு ஒப்பிட்டு எங்களை நாங்களே தாழ்த்தி கொண்டு நகர்வதும் நாங்கள் தான்..!

பள்ளியில் மாறுவேட போட்டி வைத்தால் போதும் 90% பேர் அன்று பிச்சைக்காரன் வேடம் அணிந்து பெருமை கொண்ட நாங்கள் இன்று இதுவும் போதவில்லை இன்னும் வேண்டும் வேண்டும் என்று ஏனோ மனது ஏங்குகிறது..!

அன்றைய தினம் வாட்டர் பாட்டில் கண்டதில்லை நாங்கள் சாப்பிட்ட தட்டை கழுவி பின்பு அதை தண்ணீரை தட்டில் பிடித்து குடித்தவர்கள் நாங்கள்..! இன்று போல அன்று குடிப்பதற்கு ஒரு தண்ணீர் கழுவதற்கு ஒரு தண்ணீர் என்று இல்லை அத்தனையும் ஒரே தண்ணீர் தான்..!

பெண் தோழி அருகில் உரசிக்கொண்டு தான் பள்ளி சென்றோம் காமம் ஒருபோதும் இருந்ததில்லை ஆனால் இன்றோ…?ஆண் பிள்ளையை கண்டால் தூர விலகு என்று கூறிக்கொள்ளும் அளவிற்கு சமூகம் வளர்ந்துள்ளது..!

பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்தால் இரவு கண்ணாமூச்சி விளையாட்டு சில நேரங்களில் இரவு உணவை கூட மறந்து விடுவோம் விளையாண்ட இடத்திலோ, நாடக கொட்டகையிலோ படுத்து உறங்கியதுண்டு தூக்கம் கலையாமல் அம்மா தூக்கி கொண்டு வீட்டில் தூங்க வைத்த ஞாபகம் இன்னும் நினைவிருக்கிறது..!

பால்காரனிடம் பால் வாங்கிய நாங்கள் தான் இன்று பாக்கெட் பால் வாங்க வரிசையில் காத்திருக்கிறோம்..!

குளிப்பதற்கு குளம் குதிப்பதற்கு கிணறு என்று அனுபவித்த நாங்கள் இன்று ஒரு வாளி தண்ணீரில் குளித்து முடிக்க நிர்பந்திக்கபடுகிறோம்..!

ரேங் அட்டை பள்ளியில் கொடுத்து கையெழுத்து வாங்கி வர கூறும்போது பயந்து வீட்டிற்கு வந்து அதை கையெழுத்து வாங்காமல் ஒரு வார காலம் மறைத்து ஒரு நாள் அம்மாவே பள்ளிகூடத்துக்கு வந்து ரேங் அட்டை எங்கு என்று ஆசிரியரிடம் கேட்க..! அம்மாவும் ஆசிரியரும் அடித்த போது அழுதுகொண்டே வீடு வந்த ஞாபகம் இன்னும் நினைவூருக்கிறது..!

அன்றைய தினம் ஜோடி செருப்பு ₹12 பஞ்சு செருப்பு இதை அணியவே நண்பணுக்கு வசதி இல்லாத போது ஆளுக்கு ஒரு செருப்பை அணிந்து நடந்த ஞாபகம்…!

அன்றைய தினம் சைக்கிளில் பள்ளி வந்தால் அவன் பணக்காரண் அந்த பணக்காரன் சைக்கிளில் அத்தனை புத்தக மூட்டைகளையும் கொடுத்து விட்டு வெறுங்கையுடன் நடந்து வந்த ஞாபகம்..!

ஊருக்கு ஒரு பஞ்சாயத்து டீவி, அந்த டீவியை காண கூட்டம் அலைமோதும் அங்கே அமர்ந்து பிடிக்காதவர்களை நோக்கி சிறு கல்லை தூக்கிப்போட்டு விளையாடி தெருச்சண்டை வரை வந்த ஞாபகம்..!

சில தவிர்க்க முடியாத வேலைகள் இருப்பதால் இத்தோடு எழுதுவதை நிறுத்தி கொள்கிறேன்

90ஸ் கிட்ஸ் நம்பிய பொய்கள்

காசை புதைச்சு வெச்சா மரமா வளர்ந்து காசு காய்க்கும்….????????????

ஓணான் கடவுளுக்கு மூத்திரம் கொடுத்துச்சி
அணில் பால் கொடுத்துச்சாம்

வௌவால பாத்தா தலை முடியை பிடிக்கனும்,
வானத்தில் பறவை கூட்டமாக பறந்தால் கை விரல் ஒன்று சேர்த்து கொக்கு பற பற னு சொல்லனும்

ரயில் தண்டவாளத்தில் நாணயத்தை வைத்தால் அதன் மீது ரயில் போனால் அது காந்தமாக மாறும்…

பென்சில் சீவி சுடு தண்ணீரில் போட்டால் ரப்பர் ஆகும்

அந்த காலம் (90) ஒரு இனிமையான தருணம்
வீட்டு முன்னால ஒத்த காக்கா கத்துனா விருந்தாளி வரும், இரட்டை ஆந்தை கத்துனா கல்யாணம் நடக்கும்
ஒத்த ஆந்தை கத்துனா எலவு விழும்
இன்னமும் ஒத்த காக்கை,ஆந்தைய வெரட்டிக்கிட்டு கெடக்குறாங்கெய்யா

பல் விழுந்தா ஆட்டு கால் தரைல புதைச்சா ஆட்டுக்கு மாதிரி சின்ன பல் முளைக்கும்..மாட்டு கால் ல மிதிச்சிட்டா மாடு மாதிரி பெரிய பல் முளைக்கும் அப்படின்னு நினைச்சு நம்பிருக்கேன்..

ரெட்ட சுழி இருந்தா இரண்டு பொன்டாட்டி. …

சிலந்தி பூச்சி கடிச்சா ஸ்பைடர் மேன் ஆகிடுவோம் என்று

நம்பனது.

பள்ளிக்கூடம் போகும் போது ,அணில் குறுக்கே போனால் “அணில் மாமா சல்யூட் ” சொல்லணும். அப்படி சொன்னா அந்த நாள் பள்ளியில் அடி கிடைக்காது. சொல்லலைண்ணா அடி கிடைக்கும்

பொய் சொன்னா பொம்பள புள்ள பொறக்கும் மழை இடி இடிக்கும் போது வெளியில போனா கண்ணு போய்டும்

ஒவ்வொரு தேர்தலுக்கும் காவேரி -குண்டாறு இணைக்கப்படும்.நானும் நம்பிக்கிட்டேதான் இருக்கேன்.

ரொம்ப சிரிச்சிட்டா அழப்போறோம்னு தலைல கொட்டிக்கனும் ???????????? ????????????????????????

இன்ஜினியரிங் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் வெளிநாட்டுல போய் நல்லா சம்பாதிக்கலாம் நம்ம ஊர்ல எல்லாரும் நம்மள இன்ஜினியர் இன்ஜினியர் கூப்பிடுவாங்க எதிர்பார்த்தேன் ஆனா இப்போ உண்மை புரியுது.

கறிக்கொழம்பு தூக்குச்சட்டில கொண்டு போன பேய் புடிக்கும்

அத்தையோட மூத்த மகளுக்கும் உனக்கும் தான் கல்யாணம்..!

அணில் தான் ராமருக்கு தண்ணி குடுத்துச்சு….அதனால ராமர் 3 விரல வச்சு அணில் முதுகுல கோடு போட்டார்

திண்டுக்கல் மலைக்கோட்டை ல இருந்து திரிச்சி மலைக்கோட்டை க்கு சுரங்கம் இருக்கு..!

ங்க ஊர் மைக் செட் ல பாட்டு போட்டால் மெட்ராஸ் வரைக்கும் கேக்குமாம்

இதில் எந்த அனுபவமானது உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ இருந்தால் பகிர்ந்து பழைய காலத்தில் வாழ்ந்து வாருங்கள் ஒரு இரண்டு நிமிடம்.!

You might also like

Leave A Reply

Your email address will not be published.