8 மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தி சில இலட்சங்கள் அபராதம் விதித்ததாக அப்பகுதியிலுள்ள விவசாயிகளால் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

0 204

விவசாயத்திற்கு உதவவில்லை என்றாலும் கூட பரவாயில்லை அதை அழிக்காதீர்கள்

நமது ஆத்தூர் புறவழிச்சாலையை ஒட்டியும், தென்னங்குடிபாளையம் ஏரி அருகே உள்ள விவசாய பூமியை அழித்து அமைந்துள்ளது ஒரு அசைவ “மெஸ்”…..

இந்த மெஸ் கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இதிலிருந்து வெளியே வரும் கழிவுநீர் அருகில் இருக்கும் விவசாய கால்வாயில் கலந்து விடப்படுகிறது. இதனால் அங்குள்ள விவசாய நிலங்களில் அந்த கழிவுநீர் சென்று மாசு அடைந்துள்ளது…
மிகவும் துர்நாற்றமும் வீசுகிறது…

மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் கூட சுமா‌ர் 8 மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தி சில இலட்சங்கள் அபராதம் விதித்ததாக அப்பகுதியிலுள்ள விவசாயிகளால் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அபராத தொகையுடன் 6 மாத கால அவகாசமும் அளிக்கப்பட்டதாம்…

சுமார் 200 மீட்டர் தொலைவு வரை இந்த கழிவு நீரானது சென்று அந்த இடத்தை மிகவும் மாசுபடுத்தி விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளது…

கால்நடைகள் கூட அந்த பகுதியில் உள்ள புல்லை மேய மறுக்கிறது….

இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்…

நன்றி : பாதிக்கப்படும் விவசாயிகள்

முகநூல் பகதர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.