30 வயதை கடந்தும் திருமணம் இல்லாமல் ஆணும் பெண்ணும் இருப்பதற்கு இவையே காரணம்..!

0 2,040

30 வயதை கடந்தும் திருமணம் இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள். இதற்கு சொத்து மதிப்பே காரணம் அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும்.

அவரே சென்னை, பெங்களூர் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.வீட்டுக்கு ஒரே பையனா இருந்த ரொம்ப நல்லா இருக்கும்.

அப்புறம் இதெல்லாம் இருந்தாலும்
தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய் அஜித் அவர்கள் போல்.

1995 வரை திருமண செய்தவர்கள்
சொத்து...

தகுதி பார்த்து இருந்தால் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.

இதில் இப்ப என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும் பெண்ணும் அதிகமாக இருப்பது தான்.

சரி இதன் விளைவு என்ன என்று பார்ப்போம்…

1979 வரை ஒவ்வொரு கிராமத்திலும்
பலருக்கு 10 குழந்தைகள், எட்டு குழந்தைகள்.

குறைந்தது 5 குழந்தைகளை சர்வசாதர்னமாக பெற்று கொண்டார்கள்.

1980 க்கு பின் 100 யில் 90 குடும்பம் இரண்டு குழந்தைகள்

எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு.
1990 க்கு பின் ஒரே குழந்தை தான்.

2000 க்கு பின் ஒரு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது.

ஆனால் 2010 க்கு பின் ஒரு குழந்தையாவது வேண்டும்
இறைவா என்று போகாத கோவிலும் இல்லை.

பார்க்காத மருத்துவமும் இல்லை
என்ற நிலையில் உள்ளோம்.

இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம்
ஆனால்
முதல் காரணம் ஆரோக்கியம்.

1979 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 19 யில் திருமணம்.

உணவு : ராகி, கம்பு, சோளம்.

1989 க்கு மேல் பெண் 17 ஆண் 21.

உணவு : அரிசி.

1992 க்கு மேல் பெண் 18 ஆணுக்கு 24

உணவு பட்டைதீட்டப்பட்ட அரிசி,

2000 க்கு மேல் பெண் 25, ஆண் 30.

உணவு: துரித உணவு.

2010 க்கு மேல்

உணவு:
மைதா மாவில் தயாரித்த உணவு.

வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம்.

தரம் குறைந்த எண்னெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மையின் தாக்கத்தில் இருக்கிறோம்.இந்நிலையில்
28 க்கு மேல் 35 வரையில் பெண் அதிகளவில் இருக்கிறார்கள்.

ஆண்கள் 30 முதல் 40 வயது வரை உள்ளார்கள்.வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது
வியாபாரம்.

திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து,
பிற்காலத்தில் பணம் புகழ்பெற்ற மனிதர்கள் ஏராளம்.முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து,
திருமணம் முடிந்து சில ஆண்டுகளில்
ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்.

எனவே வரும்காலம்
இப்படி தான் இருக்கும் என்று தீரமானம்
செய்யாமல், நல்லதை மற்றும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யலாம்.

இதை வெறும் தகவலாக படித்துவிட்டு போக வேண்டாம்.

தயவுசெய்து
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் அதற்கு

பணம் தேவைதான் ஆனால்.பணத்தால் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது.

நல்லொழுக்கம் உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மனமுடியுங்கள்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.